அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக்க தான் குணமடைந்து திரும்பி வருவேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டிரம்ப், ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தான் நலமுடன் இருப்பதாகக் கூறியுள்ள டிரம்ப், மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக்க தான் திரும்பி வருவேன் என்றும், தான் ஒரு நல்ல வேலையை செய்துள்ளதாகவும், இன்னும் பல படிகள் முன்னேறி அதனை முடிக்க வேண்டியுள்ளது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ட்ரம்ப் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மெலனியா ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ட்ரம்பின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவுகின்றன. அதேசமயம், வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் உலவுகின்றன. இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் ட்ரம்ப் தற்போது வீடியோ வெளியிட்டு, அவரே தனது உடல்நிலை குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார்.
Published by:Yuvaraj V
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.