ஹோம் /நியூஸ் /உலகம் /

செல்ல நாய்க்குட்டிக்கு பிரியாவிடை... வருத்தத்தில் ஒபாமா

செல்ல நாய்க்குட்டிக்கு பிரியாவிடை... வருத்தத்தில் ஒபாமா

காட்சிப் படம்

காட்சிப் படம்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் செல்ல நாய்க்குட்டி புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிட்செல் ஒபாமா தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இரங்கல் செய்தியில், உண்மையான நண்பர் மற்றும் விசுவாசமான தோழனை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். போ (Bo) என்ற பெயரிடப்பட்ட அந்த நாய், பாராக் ஒபாமா மற்றும் குடும்பத்தினரின் செல்ல பிராணி. வீடு மட்டுமல்லாது வெளியே எங்கு சென்றாலும் 'போ'-வை அழைத்துச் செல்வதை அவர்கள் வழக்கமாக வைத்திருந்தனர். பொது இடங்களுக்கு சென்றால், குதூகலமாகும் போ அங்கிருக்கும் பொதுமக்கள் உள்ளிட்டோருடன் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தது.

ஒபாமா மற்றும் மிட்செல் ஒபாமா ஆகியோரின் கட்டளைகளுக்கு உடனடியாக செவிசாய்க்கும் அந்த நாய்க்குட்டி, ஒபாமாவின் விளையாட்டு தோழனாக இருந்து வந்தது. 2008 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா போட்டியிட்டபோது அவருக்கு பக்கபலமாக மறைந்த செனட்டர் எட்வர்டு கென்னடி இருந்தார். ஒபாமாவின் நம்பிக்கைகுரியவர்களுள் ஒருவராக இருந்த அவர், அப்போது போ (BO) - வை ஒபாமாகவுக்கு பரிசளித்தார். போர்ச்சுகீசிய தண்ணீர் நாயான போ அன்றுமுதல் ஒபாமா வீட்டின் ஒரு குடும்ப உறுப்பினராக மாறியது. மகள்கள் மலியா மற்றும் ஷாஷா வலியுறுத்தியதன்பேரில் 2013 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது போவுக்கு ஒபாமா சத்தியம் ஒன்றை செய்து கொடுத்தார்.
 
View this post on Instagram

 

A post shared by Barack Obama (@barackobama)அதாவது, தேர்தலுக்குப் பிறகு புதிய நாய் ஒன்றை போவுக்கு ஜோடியாக வாங்கித் தருவதாக கூறினார். அதனடிப்படையில் சன்னி என்ற நாய்க்குட்டி போவுக்கு ஜோடியாக ஒபாமா குடும்பத்தில் இணைந்தது. அதன்பின்னர், வெள்ளை மாளிகையில் இரண்டு நாய்களையும் ஜோடியாக பார்க்க முடியும். அரசு அலுவலகங்கள் என அனைத்து பகுதிகளிலும் இரு செல்லப்பிராணிகளும் சுற்றித்திரிந்தன. இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போ சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை மரணத்தை தழுவியது. இந்த சோகமான தகவலை அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும், அவரது மனைவியும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Also Read: கொரோனாவில் இருந்து மீண்ட ஒரு மாதத்திற்கு பிறகு இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் உனடனடி பரிசோதனை தேவை..!

உண்மையான மற்றும் விசுவாசமான தோழனாக இருந்த போ-வை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். கோடையில் நீச்சல் குளத்தில் குழந்தைகளுடன் விளையாட போ ஆசையாக இருந்தாகவும், அது தற்போது நிறைவேறவில்லை என தெரிவித்துள்ள ஒபாமா, இரவு நேரத்தில் சாப்பிடும் மேசையை நல்ல முடியுடன் சுற்றிவரும் என நினைவுகளையும் பகிர்ந்துள்ளார். ஈஸ்டர் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு பார்வையாளர்களை போ மகிழ்ச்சிப்படுத்தும். சில சமயங்களில் அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு விருந்தினர் வரவேற்பு நிகழ்வில் மிட்செல் ஒபாமாவுடன் போ இருக்கும்.

Also Read:ஒரு ஆக்சிஜன் படுக்கை வாங்க ரூ.12,000 தேவைப்படுகிறது.. பொதுமக்கள் நிதியளிக்கலாம்.. தமிழிசை வேண்டுகோள்..

போ-வுடன் எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்கள் மற்றும் அது சுற்றித் திரிந்த மற்றும் விளையாடிய இடங்களின் புகைப்பட தொகுப்பு ஆகியவற்றையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒபாமா பகிர்ந்துள்ளார். கொரோனா காலத்தில் அதிகமான நேரங்களை போவுடன் செலவழித்ததாகவும், அந்த நேரங்கள் மிகவும் மகிழ்ச்சியானவை என தெரிவித்துள்ள மிட்செல் ஒபாமா, குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்தியற்கு நன்றி என போவுக்கு இரங்கல் குறிப்பு மூலம் பிரியாவிடை கொடுத்துள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Barack Obama