முன்னாள் பிரதமரின் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்

news18
Updated: October 10, 2018, 3:09 PM IST
முன்னாள் பிரதமரின் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்
news18
Updated: October 10, 2018, 3:09 PM IST
2004-ம் ஆண்டு பேரணியில் குண்டு வீசிய வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் கலீத ஜியாவின் மகன் உட்பட 19 பேருக்கு ஆயுள் தண்டனையும், 19 பேருக்கு மரண தண்டனையும்  வழங்கி உத்தரவிட்டது. 

வங்கதேசத்தின் தற்போதைய பிரதமர் ஷேக்ஹசீனாவின் அவாமிலீக் கட்சி கடந்த 2004-ம் ஆண்டு டாக்காவில் பேரணி நடத்தியது. அப்போது பிரதமராக கலீத ஜியா இருந்தார்.

2004-ல் நடந்த தாக்குதல்


இந்த பேரணியில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஷேக் ஹசீனா பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். 24 பேர் கொல்லப்பட்டனர். 500 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கு வங்கதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் மேற்கூறிய வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம் 19 பேருக்கு மரண தண்டனையும் 19 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்துள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 19 பேரில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீத ஜியாவின் மகன் தாரிக் ரகுமானும் ஒருவர். அதேபோல், இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் முன்னாள் அமைச்சர் லுட்ஃபோஸ்மன் பாபரும் ஒருவர் ஆவார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரகுமான் தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார்.
First published: October 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...