முகப்பு /செய்தி /உலகம் / இந்தியா வங்கதேச நட்பு..! - பிரதமர் மோடியை புகழ்ந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா

இந்தியா வங்கதேச நட்பு..! - பிரதமர் மோடியை புகழ்ந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா அளித்த பேட்டியில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • int, IndiaBangladeshBangladesh

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, உக்ரைன் போர்க் காலத்தில் அங்குச் சிக்கிக் கொண்ட வங்கதேச மாணவர்களை இந்திய மாணவர்களுடன் சேர்த்து மீட்டதுக்கும், மேலும் கொரோனா காலத்தில் அண்டை நாடுகளுக்குத் தடுப்பு ஊசியை அளித்ததற்கும் நன்றி தெரிவித்ததோடு, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் செயலை பெருமிதமாய் புகழ்ந்துள்ளார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா நாளை நட்பு ரீதியான சுற்றுப் பயணமாக இந்தியா வர உள்ளார். இந்த நிலையில் அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி வங்கதேசத்திற்கு உதவியதை பற்றிக் கூறியுள்ளார். அதில் உக்ரைன் போர்க் காலத்தில் பிரதமர் மோடி அந்நாட்டு மாணவர்கள் வங்கதேசம் வந்தடைய உதவியதற்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் கொரோனா காலத்தில் தடுப்பு ஊசியை வங்கதேசத்திற்குத் தடுப்பூசி மைத்ரி திட்டம் மூலம் அளித்ததற்கு நன்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு உதவும் செயல்களைப் பாராட்டியுள்ளார். நாங்கள் கொரோனா தடுப்பு ஊசிகளைப் பணம் கொடுத்து வாங்கியுள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read : 11 லட்சம் ரோஹிங்கியாக்கள், எங்களுக்கு பெரும் சுமை.. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா கவலை

இதனையடுத்து அந்த தருணத்தில் இந்தியா வங்கதேசத்திற்கு நட்பு ரீதியாக நல்லிணக்கம் காட்டிய தருணங்களை நினைவு கூர்ந்துள்ளார். இந்திய 1971ம் ஆண்டு நடத்த இந்தியப் பாகிஸ்தான் போரில் வங்கதேசத்திற்கு அளித்த ஆதரவையும், அதனைத் தொடர்ந்து தற்போது வரை தொடரும் நட்பையும் குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றிப் பேசுகையில் 1975ம் ஆண்டுகளில் இந்தியாவின் அப்போதைய பிரதமர் வங்கதேச மக்களுக்கு உதவியதை நினைவு கூர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Bangladesh, Prime Minister Narendra Modi