Home /News /international /

11 லட்சம் ரோஹிங்கியாக்கள், எங்களுக்கு பெரும் சுமை.. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா கவலை

11 லட்சம் ரோஹிங்கியாக்கள், எங்களுக்கு பெரும் சுமை.. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா கவலை

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா

ரோஹிங்கியாக்கள் எவ்வளவு சீக்கிரம் அவர்கள் சொந்த நாட்டிற்கு செல்வார்களோ அது வங்கதேசத்திற்கும், மியான்மருக்கும் நல்லது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • interna, IndiaDhakaDhakaDhaka
    ரோஹிங்கியாக்கள் வங்கதேச நாட்டிற்கு பெரும் சுமையாக உள்ளனர் என அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா கவலை தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு ஷேக் ஹசினா பேட்டி அளித்தார். அதில், ரோஹிங்கிய இஸ்லாமியர்கள் குடியேற்றம் குறித்து அவர் முக்கிய கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேட்டியில் கூறியதாவது, "இந்தியா பெரிய நாடு. இந்தியாவால் பலரை வைத்துக்கொள்ள முடிவும். ஆனால் இந்தியாவில் அந்த அளவுக்கு ரோஹிங்கியாக்கள் இல்லை. ஆனால் எங்கள் நாடு அந்த அளவுக்கு பெரிய நாடு இல்லை.

    அதேவேளை, இப்போது 11 லட்சம் ரோஹிங்கியாக்கள் வங்கதேசத்தில் உள்ளனர். இது எங்களுக்கு பெரும் சுமை. எனவே, சர்வதேச சமூகம், நட்பு நாடுகளுடன் இணைந்து நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். அவர்களை சொந்த நாட்டில் மீண்டும் சேர்க்க முயற்சிகள் நடைபெறுகிறது. மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் உணவு, உறைவிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து வைத்துள்ளோம். கோவிட் காலத்தில் அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    ஆனால், எவ்வளவு நாள்கள் அவர்களை இங்கு தங்க வைத்திருக்க முடியும். எனவே, எவ்வளவு சீக்கிரம் அவர்கள் சொந்த நாட்டிற்கு செல்வார்களோ அது வங்கதேசத்திற்கும், மியான்மருக்கும் நல்லது. இந்தியா ஒரு அண்டை நாடாக, இதில் முக்கிய பங்காற்ற முடியும்"  என்றார்.

    இதையும் படிங்க: தைவானுக்கு பில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா - சீனா கடும் எதிர்ப்பு!

    வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா நான்கு நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார். இந்த பயணத்தின் போது முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. மியான்மர் நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு கலகம் காரணமாக அங்கு வசிக்கும் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் பலர் அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அண்டை நாடான வங்கதேசத்தில் தான் லட்சக் கணக்கில் மக்கள் குடிபெயர்ந்துள்ளது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் பல ரோஹிங்கியாக்கள் சட்டவிரோதமாக குடிபெயர்வது பெரும் அரசியல் பிரச்னையாக இந்தியாவின் எல்லை மாநிலங்களில் உருவெடுத்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Bangladesh, Rohingya Crisis, Rohingya Refugees

    அடுத்த செய்தி