தனக்கு பதிலாக தேர்வு எழுத எட்டு போலிகளைத் தயார் செய்து சிக்கிய பெண் எம்.பி!

தமன்னா நுஸ்ரத் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இனிமேல், பல்கலைக்கழகத்தின் கீழ் நடைபெறும் எந்த தேர்வுகளுக்கு அவர் அனுமதிக்கப்படமாட்டார்.

தனக்கு பதிலாக தேர்வு எழுத எட்டு போலிகளைத் தயார் செய்து சிக்கிய பெண் எம்.பி!
தமன்னா நுஸ்ரத்
  • News18
  • Last Updated: October 22, 2019, 7:08 PM IST
  • Share this:
பல்கலைக்கழகத் தேர்வில் போலியை வைத்து தேர்வு எழுதிய நிலையில் வங்கதேச பெண் எம்.பி தமன்னா நுஸ்ரத் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

வங்கேதசத்தை ஆளும் கட்சியா அவாமி லீக் கட்சியின் எம்.பி தமன்னா நுஸ்ரத். அவர், திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ படித்துவந்தார். பல்கலைக்கழக தேர்வில் அவருக்குப் பதிலாக போலியை வைத்து தேர்வு எழுதிய புகாரில் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, வங்கதேசத்தைச் சேர்ந்த நாகோரிக் தொலைக்காட்சியில், ‘நான்கு பருவங்களில் 13 தேர்வுகள் நடைபெற்றுள்ளன. அதில், எந்தத் தேர்வுகளையும் தமன்னா நுஸ்ரத் எழுதவில்லை’என்று செய்தி வெளியானது.

அந்தத் தொலைக்காட்சியில், கடந்த சனிக்கிழமை நர்ஷிங்டி அரசுக் கல்லூரியில் தேர்வு நடைபெற்ற தேர்வு அறைக்குள் நுழைந்து தமன்னா பதிலாக தேர்வு எழுதிய போலியை வீடியோ எடுத்து வெளியிட்டது. அதனையடுத்து, இந்த விவகாரம் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து தெரிவித்த பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னன், ‘தமன்னா நுஸ்ரத் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இனிமேல், பல்கலைக்கழகத்தின் கீழ் நடைபெறும் எந்த தேர்வுகளுக்கு அவர் அனுமதிக்கப்படமாட்டார்’ என்று அறிவித்தார்.


தமன்னா நுஸ்ரத் அவருக்காக தேர்வு எழுத எட்டு போலிகளை தயார் செய்துள்ளார் என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Also see:

First published: October 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்