ரோஹிங்கியா குழந்தைகளுக்கு மறுக்கப்படும் கல்வி... மனித உரிமை கண்காணிப்பகம் கண்டனம்!

முறையான கல்வி அளிக்க முன்வரும் ஐநா அமைப்புகள், வெளிநாட்டு தன்னார்வ அமைப்பினருக்கும் உள்ளே நுழைய அனுமதி வழங்கப்படுவது இல்லை

ரோஹிங்கியா குழந்தைகளுக்கு மறுக்கப்படும் கல்வி... மனித உரிமை கண்காணிப்பகம் கண்டனம்!
ரோஹிங்கியா
  • News18
  • Last Updated: December 3, 2019, 7:39 PM IST
  • Share this:
வங்கதேசத்தில் லட்சக்கணக்கான ரோஹிங்கியா குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டு வருவதற்கு மனித உரிமை கண்காணிப்பகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மியான்மரில் இருந்து வெளியேறும் வங்கதேச அகதிகள் முகாம்களில் வசித்து வரும் சுமார் 4 லட்சம் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி கூட மறுக்கப்படுவதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து ராய்டர்ஸ் நிறுவனத்துக்கு விளக்கமளித்துள்ளார் மனித உரிமை கண்காணிப்பகம் இயக்குநர் பின் வான் எஸ்வெல்ட்.

அவர் கூறுகையில், “ஒரு தலைமுறையைச் சார்ந்த அத்தனை குழந்தைகளுக்கும் கல்வி மறுக்கப்படுவது சரியல்ல. சர்வதேச சமூகம் இதை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும். வங்கதேசம் மற்றும் மியான்மரிடம் கேள்வி கேட்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். ரோஹிங்கியா மக்களை மியான்மர் ராணுவம் தாக்கியதை அடுத்து கடந்த 2017-ம் ஆண்டு முதல் அம்மக்கள் வங்கதேசம் நோக்கி புலம்பெயர்ந்து வருகின்றனர்.


வங்கதேச ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் உள்ள குழந்தைகள் முகாம்களைவிட்டு வெளியே சென்று படிக்க முடியாது. பொதுத்தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் எதையும் எழுத முடியாது. மேலும், முறையான கல்வி அளிக்க முன்வரும் ஐநா அமைப்புகள், வெளிநாட்டு தன்னார்வ அமைப்பினருக்கும் உள்ளே நுழைய அனுமதி வழங்கப்படுவது இல்லை என்பது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் பார்க்க: அமேசான் காட்டுத்தீக்கு நான் காரணமா?- மறுக்கும் டைட்டானிக் நாயகன்!
First published: December 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்