சூழலியல் மாற்றத்தால் வாழைப்பழத்திற்கு வந்த ஆபத்து!

news18
Updated: May 9, 2019, 2:05 PM IST
சூழலியல் மாற்றத்தால் வாழைப்பழத்திற்கு வந்த ஆபத்து!
வாழைப்பழம்
news18
Updated: May 9, 2019, 2:05 PM IST
பாரீஸில் சர்வதேச சூழலியல் மாநாடு ஒன்று நடைபெற்று வருகிறது. அதில் சூழலியல் மாற்றத்தால் இயற்கை எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த ஆய்வுகளை தாக்கல் செய்து வருகின்றனர்.

பாரீஸ் மாநாட்டின் ஆய்வறிக்கைகளைப் பார்க்கும் போது, எங்கு உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் அழிந்து விடுமோ என்று நினைக்கும் அளவிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கின்றன.

நாம் மிகப் பெரிய ஆபத்தில் இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ள சூழலியல் மற்றும் ஆராய்ச்சி பேராசிரியரான சார் பாப் வாட்சன், நாம் மிகப் பெரிய ஆபத்தில் இருக்கிறோம், அதற்காகப் பயப்பட வேண்டும் என்பதில்லை. தக்க நடவடிக்கையை எடுத்தால் அதிலிருந்து மீளலாம். பறவைகள், தவளை, வங்கப்புலி, மீன் உள்ளிட்ட உயிரினங்கள் அழியும் அபாயம் உள்ளது.


மாறி வரும் சூழலியலால் வாழைப்பழங்களுக்கு பிளாக் சீகடோகா என்ற பூஞ்சை நோய் தாக்கும் அபாயம் உள்ளது.

ஏழை முதல் பணக்காரர் வரை என அனைவருக்கும் கிடைக்கும் ஒரு பழம் வகையாக வாழைப்பழம் உள்ளது. ஆனால் இந்த சூழலியல் மாற்றங்களால் பூஞ்சை நோய் தாக்கப்பட்ட வாழைப்பழத்தைச் சாப்பிடும் போது மனிதர்களை அறிய நோய்கள் தாக்கும்.

பின்னர் வாழைப்பழங்களைச் சாப்பிட முடியாத நிலைக்கு மனிதர்கள் தள்ளப்படுவது மட்டுமல்லாமல், அவை வாழை இழைகளையும் அழிக்கும். இதனால் வாழை மரங்களை பயிரிட முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள்.

Loading...

மாறி வரும் சூழலியலால் உலகில் உள்ள அனைத்து இனங்களும் அழிந்துவிடும் என்று கூற முடியாது. ஆனால் சில உயிரினங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இந்த ஆய்வறிக்கைகளில் வருங்காலத்தில் ஏற்பட உள்ள சூழலியல் ஆபத்துகள் என்ன என்பது குறித்த விவரங்கள் ஏதுமில்லை.

மேலும் பார்க்க:
First published: May 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...