Home /News /international /

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா, மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த சீன அரசு

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா, மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த சீன அரசு

மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த சீன அரசு

மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த சீன அரசு

Full Lockdown | வாகன ஓட்டிகள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் விதமாக சாலைகளில் சிவப்பு விளக்கு மட்டும் எரியும் விதமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது

    கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து சீனாவின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள பைஸ் (Baise) நகரில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் பின்னர், பல்வேறு நாடுகளுக்கும் பரவிய கொரோனா வைரஸ் உயிர் சேதங்களையும் பொருட் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 57 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    தற்போதும் டெல்டா, ஓமைக்ரான் என கொரோனா வைரஸ் புதிய புதிய திரிபுகளாக மாறி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. தற்போது பெய்ஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

    பைஸ் நகரில் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. எனினும்,  ‘ஜூரோ கோவிட் கொள்கை’யில் சீனா தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக பைஸ் நகரில் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாரும் நகரத்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதையும் படிங்க: முன்னாள் மனைவி கொடுத்த பகீர் புகார்... திருமண நாளான்று மணமகன், மணமகள் கைது!


    வாகன ஓட்டிகள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் விதமாக சாலைகளில் சிவப்பு விளக்கு மட்டும் எரியும் விதமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வியட்நாம் எல்லையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பைஸ் நகரின் நகர்ப்புற பகுதிகளில் 14 லட்சம் மக்களும் கிராமப்புற பகுதிகளில் 30 லட்சம் மக்களும் வசிக்கின்றனர்.

    மேலும் படிங்க: இமயமலையை விடவும் 4 மடங்கு பெரியது-அழிந்து போன ‘சூப்பர்மலைகள்’-கண்டுப்பிடிப்பு


    சர்வதேச அளவில் அலுமினிய உற்பத்தியில் பைஸ் நகர் முக்கிய இடத்தை வகிக்கிறது. தற்போது, அங்கு போடப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக அலுமினிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அலுமினியத்தின் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: China, Corona, Lockdown

    அடுத்த செய்தி