பஹ்ரைன் பிரதமர் காலமானார்

Bahrain PM Death: 84 வயதான கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அமெரிக்காவின் மாயோ கிளினிக் மருத்துவமனையில் இன்று காலமானார்.

பஹ்ரைன் பிரதமர் காலமானார்
  • Share this:
உலகின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த பஹ்ரைனின் இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா காலமானார் என மாநில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா நவம்பர் 24, 1935-ம் ஆண்டு பிறந்தவர். பஹ்ரைன் இளவரசர் மற்றும் அரசியல்வாதியாகவும் இருந்து வந்தார். ஆகஸ்ட் 15, 1971 பஹ்ரைன் சுதந்திரம் பெற்றதிலிருந்து கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா பிரதமராக இருந்து வந்துள்ளார். உலகின் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் இவர்.

84 வயதான கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அமெரிக்காவின் மாயோ கிளினிக் மருத்துவமனையில் இன்று காலமானார். அமெரிக்காவிலிருந்து உடல் சொந்த வீட்டிற்கு வந்த பின் இறுதி சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காலம் என்பதால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் உறவினர்கள் கலந்து கொள்ளவார்கள் என கூறப்படுகிறது.துக்க காலத்தில், கொடிகள் அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டு, அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: November 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading