அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகியுள்ள டோரியன் சூறாவளி, பஹாமஸ் நாட்டை சூறையாடிவிட்டு, அமெரிக்காவை நோக்கி நகர்ந்து வருகிறது.
அட்லாண்டிக்கில் உருவான டோரியன், 5வது நிலை சூறாவளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளி பஹாமாஸை திங்கட்கிழமையில் கடுமையாக தாக்கியது. அங்கு பலத்த காற்று வீசியதுடன் கனமழையும் கொட்டியது. இதுவரை இல்லாத அளவுக்கான சக்திவாய்ந்த சூறாவளியாக டோரியன் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பஹாமாஸ் நாடு முழுவதுமாக உருக்குலைந்தது. 220 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால், பேரழிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடலில் சுமார் 20 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்தன. உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
ஆனால் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கடமையாக சேதமடைந்துள்ளதாக அங்கு மீட்பு பணிகளை மேற்கொண்டு வரும் ரெட் கிராஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. அங்கிருந்து வரும் வீடியோக்களும் புகைப்படங்களும் நிலைமையின் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளன. இந்தச் சூறாவளி தற்போது அமெரிக்காவை நோக்கி நகர்ந்து வருகிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி நகரும் டோரியன் சூறாவளி அபாகோ தீவையும் சூறையாடிச் சென்றுள்ளது. அபாகோ தீவில் அலைகள் வழக்கமான அளவை விட 18 முதல் 23 அடிவரை அதிகமாக இருந்ததாக அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது. ஆலயங்களும் பள்ளி கூடங்களும் தற்காலிக நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.
அபாகோ தீவில் சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
புளோரிடா கடற்கரையில் இருந்து சுமார் 150 மைல் தொலைவில் டோரியன் சூறாவளி மையம் கொண்டுள்ளது. இதனால் கடற்கரைகளை விட்டு மக்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஃபிளோரிடா, ஜார்ஜியா மற்றும் வடகரோலினா மாகாணங்களில் அவரச நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சூறாவளியை எதிர்கொள்ள அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், இதுவரை தான் 5- ஆம் நிலை சூறாவளி குறித்து கேள்வியே பட்டதில்லை என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Strom