வெனிசுலாவில் தன்னை அதிபராக அறிவித்துக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்!

அதிபர் மதுரோவுக்கு ஆதரவாகவும் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். உயரும் பணவீக்கத்தால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இந்த அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

news18
Updated: January 24, 2019, 11:37 AM IST
வெனிசுலாவில் தன்னை அதிபராக அறிவித்துக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்!
ஜூவான் குயூடோ
news18
Updated: January 24, 2019, 11:37 AM IST
வெனிசுலாவில் எதிர்க்கட்சித் தலைவரான ஜூவான் குயூடோ தன்னை அதிபராக பிரகடனப்படுத்திக் கொண்டதால் அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

அதிபராக இருந்த நிகோலஸ் மதுரோ அண்மையில் நடந்த தேர்தலில், தான் வெற்றி பெற்றதாக கூறி இரண்டாம் முறையாக அதிபரானார். ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றாட்டின.

இந்நிலையில் தலைநகர் கராகஸில் எதிர்க்கட்சித் தலைவரான ஜூவான் குயூடோ பிரம்மாண்ட பேரணியை நடத்தினார். வெனிசுலா சுதந்திரம் பெற்றுவிட்டதாக அறிவித்த அவர், தானே புதிய அதிபர் என பிரகடனப்படுத்திக் கொண்டார்.

இதனிடையே அரசுக்கு எதிராக பேரணி சென்றவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் மூண்டது.

இதற்கு மத்தியில் எதிர்க்கட்சித் தலைவர் குயூடோவை அதிபராக ஏற்றுக் கொள்வதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதனைக் கண்டித்து அமெரிக்கா உடனான உறவுகளை முறித்துக் கொள்வதாக அதிபர் மதுரோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறவும் அவர் உத்தரவிட்டுள்ளார். அதிபர் மதுரோவுக்கு ஆதரவாகவும் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். உயரும் பணவீக்கத்தால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இந்த அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Also see...
Loading...
First published: January 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...