"டேஸ்ட் சூப்பர்" முதல் முறையாக சாக்லெட் மில்க் சாப்பிட்ட குழந்தையின் கியூட் ரியாக்சன்!

"டேஸ்ட் சூப்பர்" முதல் முறையாக சாக்லெட் மில்க் சாப்பிட்ட குழந்தையின் கியூட் ரியாக்சன்!

குழந்தை

முதன்முறையாக சாக்லெட் மில்க் ஷேக் சாப்பிட்ட குழந்தை 'சூப்பரான டேஸ்ட்' என ரியாக்சன் காட்டுவது இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • Share this:
குழந்தைகளின் சேட்டைகள், ரியாக்சன் என எல்லாமே சமூக வலைதளங்களில் டிரெண்டிங் லிஸ்டில் கட்டாயம் இடம்பெற்றுவிடும். வேலைக்கு சென்று சோர்வாக திரும்பியவர்கள், மன அழுத்தத்தில் இருப்பவர்கள், சண்டையிட்டு கோபமாக இருப்பவர்கள் என யாராக இருந்தாலும், ஒரு குழந்தையின் புன்சிரிப்பை பார்த்துவிட்டால், அவர்களுக்குள் இருந்த சோகம் போகும் இடம் தெரியாத அளவுக்கு ஓடிவிடும். குழந்தைகளின் சேட்டைகளையும், ரியாக்சன்களை பார்த்து ரசிப்பதற்கு என்றே சமூகவலைதளங்களில் பெருங்கூட்டம் உள்ளது.

அதேபோல், பெற்றோர்களும் தங்கள் குழந்தையின் முதல் நடை, விளையாட்டு, சேட்டைகளை வீடியோ பிடித்து பதிவேற்றுவதில் அவ்வளவு ஆர்வமாக இருப்பார்கள். அப்படி, முதன்முறையாக சாக்லெட் மில்க் ஷேக் சாப்பிட்ட குழந்தையின் ரியாக்சன் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. டம்ளர் ஒன்றில் இருக்கும் சாக்லெட் மில்க் ஷேக்கை, தந்தை குழந்தைக்கு கொடுக்கிறார். straw மூலம் உறிஞ்சி குடிக்கும் குழந்தை, அதனை டேஸ்ட் செய்துவிட்டு 'சூப்பர்' என்ற ரியாக்சனை முகத்தில் காட்டிவிட்டு கை தட்டுகிறது.
Baby trying chocolate milk for the first time from r/aww



இந்த மழலையின் சிரிப்பும், மகிழ்ச்சியும் நெட்டிசன்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வைரல் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. பலரும் குழந்தையின் ரியாக்சனை லைக் செய்து வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். சில நெட்டிசன்கள் குழந்தையின் அழகை கொஞ்சியிருப்பதுடன், தற்போது சாக்லெட் மில்க் ஷேக் சாப்பிடும்போது கூட தங்களின் ரியாக்ஷன் இப்படி தான் இருக்கும் என கூறியுள்ளனர். இதுவரை சுமார் 16 ஆயிரம் பேரிடம் லைக்குகளை குவித்து, மேலும் பல நெட்டிசன்களால் இந்த வீடியோ ரசிக்கப்பட்டு வருகிறது. சாக்லெட் மில்க் ஷேக் குடித்தது குழந்தை தான் என்றாலும், அதனை தாங்களே சாப்பிட்டதுபோல் இம்ப்ரஸாகி குழந்தையின் வீடியோவுக்கு கமெண்டும் கொடுத்து வருகின்றனர்.

இதேபோல், சிறுவன் மற்றும் சிறுமி என இருவரும் இணைந்து விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாடலான `வாத்தி கம்மிங்' பாடலுக்கு டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. சிறுவனை காட்டிலும் அந்த குட்டி குழந்தை வாத்தி கம்மிங் பாடலில் வரும் மிக பிரபலமான ஸ்டெப்பை அச்சுப்பிசகாமல் அப்படியே செய்கிறது.



சிறுவனும் விஜய்யின் மூவ்களை சிறப்பாக சிங்கிள் டேக்கில் ஆடுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்து படைக்கும் சுட்டிக் குழந்தைகள் இருவரின் ஆட்டத்தையும் விஜய் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். தற்போது விஜய், இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
Published by:Ram Sankar
First published: