’வீகன்’ உணவுமுறையைப் பின்பற்றியதால் குழந்தை மரணம்... பெற்றோர் கைது...!

பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றத்துக்காகப் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

’வீகன்’ உணவுமுறையைப் பின்பற்றியதால் குழந்தை மரணம்... பெற்றோர் கைது...!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: November 24, 2019, 8:33 AM IST
  • Share this:
’வீகன்’ என்னும் உணவு முறையைப் பின்பற்றியதால் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் 18 மாத குழந்தை இறந்ததை அடுத்து அக்குழந்தையின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஷீலா- ரயான் தம்பதியர். இவர்களுக்கு 18 மாத ஆண் குழந்தை இருந்தது. வீகன் உணவு முறையைப் பின்பற்றும் இத்தம்பதியர் தங்களது குழந்தைக்கும் இதே உணவு முறையைப் பழக்கப்படுத்தி வந்துள்ளனர்.

வீகன் என்பது சைவத்தின் அடுத்தபடியான ஒரு உணவு முறை ஆகும். இந்த உணவு முறையால் குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அறியாத பெற்றோர் தொடர்ந்து குழந்தைக்கு அதே உணவு முறையை அளித்து வந்துள்ளனர்.


திடீரென கடந்த செப்டம்பர் மாதம் அந்தக் குழந்தை மரணமடைந்துவிட்டது. ஊட்டச்சத்துக் குறைபாடால் உடல் மெலிந்து இறந்துள்ளது அக்குழந்தை. இதையடுத்து பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றத்துக்காகப் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தம்பதியருக்கு 5 மற்றும் 3 வயதுகளில் இரண்டு குழந்தைகள் வேறு உள்ளனர். இந்தக் குழந்தைகளும் பற்கள் சொத்தையாகி, உடல் மெலிந்து காணப்பட்டுள்ளனர். தற்போது இந்த இரண்டு குழந்தைகளும் அரசு காப்பகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் பார்க்க: கஞ்சா புகைக்க மாதம் ₹2 லட்சம் சம்பளம்
First published: November 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்