• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • பெற்றோர்களே உஷார்.. அம்மா குளிப்பதை இன்ஸ்டாவில் தவறுதலாக லைவ் செய்த குழந்தை – சங்கடமான நிகழ்வை பகிர்ந்த பெண்

பெற்றோர்களே உஷார்.. அம்மா குளிப்பதை இன்ஸ்டாவில் தவறுதலாக லைவ் செய்த குழந்தை – சங்கடமான நிகழ்வை பகிர்ந்த பெண்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

அமெரிக்காவை சேர்ந்த பெண் தன்னுடைய மகளால் தனக்கு நேர்ந்த சம்பவத்தை டிக்டாக்கில் பகிர்ந்துக்கொண்டார்.

  • Share this:
    குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதான ஒரு விஷயம் இல்லை. குழந்தைகள் அறியாமையில் செய்யும்  விஷயங்கள் பெற்றோர்களை சில சமயங்களில் தர்மசங்கடமான சூழலுக்கு தள்ளிவிடும். சில நேரங்களில் குழந்தைகள் செய்யும் தவறுகள் வேடிக்கையாக கூட முடிந்துவிடும். அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய மகளால் தனக்கு நேர்ந்த ஒரு சங்கடமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

    அமெரிக்காவை சேர்ந்த பிரியண்ணா என்ற பெண் தன்னுடைய மகளால் தனக்கு நேர்ந்த சம்பவத்தை டிக்டாக்கில் பகிர்ந்துக்கொண்டார். ஒருநாள் நான் எனது மொபைல்போனை மகளிடம் கொடுத்துவிட்டு குளிக்கச் சென்றேன். அவளுக்கு மிகவும் குறைவான வயதுதான். அவளால் தனியாக மொபைல் போனை சரியாக பயன்படுத்த தெரியாது. நான் கல்வி தொடர்பாக ஆஃபை டவுன்லோடு செய்திருந்தேன். அவளுக்கு அதில் வீடியோ போட்டுக்கொடுத்துவிட்டு குளிக்கச் சென்றுவிட்டேன்.

    செல்போனில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தவள் டச் ஸ்கிரீனை தொட்டதும் வீடியோ மறைந்துவிட்டது. அவளும் தனக்கு தெரிந்தவாறு போனை நோண்டியுள்ளார். பாத்ரூம் கதவை தட்டி விவரத்தை கூறீனாள். சரி என்று நான் அவளை உள்ளே வரும்படி அழைத்தேன். அவளும் போனை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தாள். நான் போனை வாங்கி அவளுக்கு வீடியோ எடுத்துக்கொடுத்தேன். அப்போது தான் இன்ஸ்டாகிராம் நோட்டிஃபிகேஷனை கவனித்தேன். அவள் போனை பயன்படுத்தும்போது இன்ஸ்டாகிராம் செயலியை ஓப்பன் செய்து லைவ் சென்றுவிட்டார். இன்ஸ்டாகிராம் லைவில் இருந்தது. எல்லாம் போனில் பேக் கேமராவில் பதிவாகிக்கொண்டிருந்தது. உடனடியாக நான் அதனை நிறுத்துவிட்டேன். என அதில் பதிவிட்டுள்ளார்.

    Also Read: ஜூம் மீட்டிங்கில் உடலுறவு கொண்ட பள்ளிஆசிரியர்.. ஷாக்கான ஊழியர்கள்

    அவரது வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்கள் வந்துள்ளது. நிறைய பெற்றோர்கள் குழந்தையால் நாங்களும் இதுபோன்ற தர்மசங்கடமான சூழலுக்கு தள்ளப்பட்டதாக கூறியுள்ளார்.ஒரு பெண் தனது கமெண்டில் நான் ஒருமுறை பாத் டப்பில் இருந்தபோது எனது மகள் தவறுதலாக ஃபேஸ்புக்கில் லைவ் செய்துவிட்டாள் என தனக்கு நடந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். குழந்தைகளிடம் செல்போன்களை கொடுக்கும்போது  குழந்தைகளுக்கானமோடை செல்போன் அமைப்பில் வைத்துக் கொடுத்தால் அவர்களால் வேறு ஆஃப்களை பயன்படுத்த முடியாது எனச்  சிலர் அறிவுரை கூறியுள்ளனர்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: