சில வேளை கர்பிணிகளுக்கு எதிர்பாராத நேரங்களில் பிரசவ வலி ஏற்பட்டு மகப்பேறு நடப்பத்தை நாம் பார்த்திருப்போம். அது போல அமெரிக்காவில் நடு வானில் விமானத்தில் பறந்து கொண்டிருந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது.
அமெரிக்காவின் கோரோலடோ மாகாணத்தில் இருந்து ப்ளோரிடா மாகாணத்திற்கு ப்ரன்டியர் ஏர்லைன்ஸ் விமானத்தில் டையான கிரால்டோ என்ற கர்பிணி பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் விமானத்தில் ஏறி பயணம் மேற்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து விமானத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்த விஷயம் விமான கேப்டன் கிரிஸ் நைஸ் என்பவரிடம் பகிரப்பட்டது. பதட்டம் கொள்ளாத கிரிஸ் அங்கிருந்த விமான ஊழியர்கள் மற்றும் சக பயணிகளின் உதவியுடன் பிரசவம் பார்க்க அவர்கள் முடிவெடுத்தனர். விமானத்தின் பறக்கும் கட்டுப்பாட்டை முழுமையாக எடுத்துக்கொண்ட கேப்டன் கிரிஸ், தரையிறங்கும் ஏர்போர்ட்டில் மருத்துவ குழுவை தயார் நிலையில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில், விமான ஊழியர்கள் மற்றும் சக பயணிகள் உதவியுடன் மகப்பேறு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, அந்த கர்பிணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த பிரசவத்தில் தாயார் டயானா சிறப்பான ஒத்துழைப்பு தந்ததாக கேப்டன் கிரிஸ் தெரிவித்தார். அவரின் தன்னம்பிக்கையும், அமைதியும் சிறந்த மிகவும் பாராட்டத்தக்கது என கிரிஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதையும் படிங்க:
பெட்ரோல் டீசல் விலையை குறைத்த இந்திய அரசுக்கு பாகிஸ்தான் இம்ரான் கான் பாராட்டு - ஏன் தெரியுமா?
நடு வானில் பிறந்த இந்த குழந்தைக்கு வானம் என பொருள்படும் Sky (ஸ்கை) என்ற பெயரை சூட்ட அவரது பெற்றோர் திட்டமிட்டுள்ளனர். இந்த சுவாரஸ்சியமான நிகழ்வை பிரன்டியர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. இந்த பதிவுக்கு 2,600க்கும் மேற்பட்ட லைக்குகளும், 350க்கும் மேற்பட்ட ஷேர்களும் கிடைத்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.