ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள்... 26 ஆண்டுகளுக்குப் பின் இணைத்த காதல்!

2010-ம் ஆண்டு தங்களது 18-வது வயதில் முதன்முதலாக ஒரு விழாவில் மாறுவேட நிகழ்ச்சிக்காகக் கலந்துகொண்ட போது சந்தித்துக்கொண்டுள்ளனர்.

Web Desk | news18
Updated: April 25, 2019, 2:28 PM IST
ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள்... 26 ஆண்டுகளுக்குப் பின் இணைத்த காதல்!
மாதிரிப்படம். (Credit: Reuters)
Web Desk | news18
Updated: April 25, 2019, 2:28 PM IST
ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் 26 ஆண்டுகளுக்குப் பின்னர் காதல் திருமணம் செய்துகொண்ட கதை லண்டன் மக்களை ஆச்சர்யபடுத்தியுள்ளது.

லண்டனைச் சேர்ந்தவர் ஷவுனா கிரேஸி மற்றும் டாம் மாகிர். இவர்கள் இருவரும் 1992-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி லண்டனின் உள்ள விகான் மருத்துவமனையில் சிறிய கால இடைவேளையிலே பிறந்துள்ளனர். இந்தக் குழந்தைகளைத் தான் காதல் 18 ஆண்டுகளுக்குப் பின் இணைத்துள்ளது.

2010-ம் ஆண்டு தங்களது 18-வது வயதில் முதன்முதலாக ஒரு விழாவில் மாறுவேட நிகழ்ச்சிக்காகக் கலந்துகொண்ட போது சந்தித்துக்கொண்டுள்ளனர். முதலில் டாம் தான் ஷவுனாவிடம் பேச முயற்சித்துள்ளார். ஆனால், ஷவுனா டாமிடம் பேசுவதைத் தவிர்த்தே வந்துள்ளார்.

படிக்க.. சொந்த பேத்தியை கருவில் சுமந்து பெற்றெடுத்த 61 வயது பாட்டி!

இதன் பின்னர் பல கட்ட முயற்சிகளுக்குப் பின்னர் ஷவுனாவின் காதலை வென்றார் டாம். சிறிது காலத்திலேயே இந்த ஜோடி தாங்கள் ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் பிறந்ததை அறிந்தவர்கள் தங்கள் காதல் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது இந்த ஜோடி தங்களது 26-ம் வயதில் மண வாழ்க்கையில் இணைந்துள்ளது அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பார்க்க: புயல் அபாயத்தால் சீற்றத்துடன் காணப்படும் கடல்...! மீனவர்களுக்கு எச்சரிக்கை
Loading...
First published: April 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...