Home /News /international /

பி 1.1.529 : புதிய வகை கொரோனா வைரஸால் கதி கலங்கும் ஐரோப்பா... விமானங்கள் அதிரடி ரத்து

பி 1.1.529 : புதிய வகை கொரோனா வைரஸால் கதி கலங்கும் ஐரோப்பா... விமானங்கள் அதிரடி ரத்து

பி 1.1.529 வைரஸில் ஸ்பைக் புரோட்டின் இருப்பதாக முதற்கட்ட ஆய்வில் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், இந்த வைரசுக்கு ஏற்கனவே போடப்பட்டுள்ள தடுப்பூசிகளை செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக கூறியுள்ளனர்.

    தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் ஐரோப்பாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு, ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றாக தடை விதித்து வருகின்றன.

    பி 1.1.529 என்ற புதிய வகை கொரோன வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், ஸ்பைக் புரோட்டின் இருப்பதாக முதற்கட்ட ஆய்வில் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், இந்த வைரசுக்கு ஏற்கனவே போடப்பட்டுள்ள தடுப்பூசிகளை செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக கூறியுள்ளனர்.

    தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அண்டை நாடுகளிலும் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தென்ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள 7 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு உலக நாடுகள் ஒவ்வொன்றாக தடை விதித்து வருகின்றன.

    ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகியவை இன்று இதற்கான உத்தரவை பிறப்பித்தன. முன்னதாக பிரிட்டனும் தடை உத்தரவை ஏற்படுத்தியிருந்தது. ஐரோப்பிய யூனியனில்ல உள்ள ஒவ்வொரு நாடாக தென் ஆப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்து வருகின்றன.

    இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்க அரசு, 'ஐரோப்பிய நாடுகளின் நடவடிக்கையை ஏற்க முடியாது. புதிய வகை வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் இதுவரைக்கும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் அனைத்து நாட்டு மக்களையும் பாதுகாக்க, எங்கள் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.' என்று தெரிவித்தார்.

    ஐரோப்பாவை தொடர்ந்து சிங்கப்பூர் நாட்டிலும், தென்ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, எஸ்வாத்தினி, லெசோத்தோ, மொசாம்பிக், நமீபியா, மற்றும் ஜிம்பாப்வே ஆகிய 7 நாடுகளின் விமானங்கள் தரை இறங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ஷாங்காய் மாகாணத்தில் புதிய வகை வைரஸ் பாதிப்பு 3 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு சுமார் 500 விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஷாங்காய் அரசு மாகாணங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. பி. 1.1.529 வேரியன்ட் வைரஸை கண்டு சக்திமிக்க நாடுகள் அச்சம் கொண்டிருப்பதை மற்ற நாடுகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி