போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதாக அஸர்பைஜான் புகார் - அர்மீனியா மறுப்பு

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதாக அஸர்பைஜான் குற்றம்சாட்டுவதை அர்மீனியா மறுத்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதாக அஸர்பைஜான் புகார் - அர்மீனியா மறுப்பு
அசர்பைஜான், அர்மீனியா இடையே தீராத மோதல்.
  • Share this:
அர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையே தொடர்ச்சியாக போர் நடைபெற்று வந்த நிலையில் இரு தரப்புகளுக்கும் மத்தியில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த போர் நிறுத்தத்தை போப் வரவேற்றுப் பேசினார். வாடிகனில் உரையாற்றிய போப் ஃபிரான்ஸிஸ் போரால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் துன்பங்களுக்காகவும், வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் சிதைக்கப்பட்டதற்காகவும் வேதனை தெரிவித்தார்.

இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அர்மீனியா தாக்குதல் நடத்துவதாக அஸர்பைஜான் குற்றம் சாட்டியுள்ளது. அஸர்பைஜானின் இரண்டாவது பெரிய நகரமான காஞ்சா மீது அர்மீனியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் 9 பேர் உயிரிழந்ததாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் அஸர்பைஜான் தெரிவித்துள்ளது.ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த நாகர்னோ - காராபாக் ராணுவ அதிகாரிகள் ஒப்பந்தப்படி தாங்கள் போர் நிறுத்தத்தை கடைப்பிடித்து வருவதாகவும், அஸர்பைஜான் தான் ஸ்டெபானகெர்ட் பகுதியில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளனர்.
First published: October 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading