முகப்பு /செய்தி /உலகம் / நியூயார்க்கில் பனிப்புயலுக்கு 23 பேர் உயிரிழப்பு!

நியூயார்க்கில் பனிப்புயலுக்கு 23 பேர் உயிரிழப்பு!

பனியில் சூழ்ந்துள்ள நியூயார்க் நகரம்

பனியில் சூழ்ந்துள்ள நியூயார்க் நகரம்

பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வீசிய கடும் பனிப்புயலால் 23 பேர் உயிரிழந்த நிலையில், பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்ததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க், அல்பாமா உள்ளிட்ட நகரங்களில் பனிப்புயலின் தாக்கம் கடுமையாக காணப்பட்டது. மணிக்கு 100 கிமீ வேகத்தில் பனிப்புயல் வீசியதால், சாலைகளில் பனியின் தேக்கம் அதிகரித்ததோடு, நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்தன.

கடலோரப் பகுதிகளில் வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்ததால், ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பனிப்புயலின் தாக்கம் காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே சாலைகளில் சாய்ந்து கிடக்கும் மரங்களையும், மின்கம்பங்களையும் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பனிப்புயல் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள அதிகாரிகள், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Also see...

First published:

Tags: NewYork