ஹோம் /நியூஸ் /உலகம் /

அமெரிக்காவில் தாக்கப்பட்ட எழுத்தாளர் சல்மான் ருஷ்டி - ஒரு கண் பார்வை, கை செயலிழப்பு

அமெரிக்காவில் தாக்கப்பட்ட எழுத்தாளர் சல்மான் ருஷ்டி - ஒரு கண் பார்வை, கை செயலிழப்பு

சல்மான் ருஷ்டி

சல்மான் ருஷ்டி

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி-க்கு ஒரு கண் மற்றும் கை செயலிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • interna, IndiaAmericaAmerica

  சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மேல் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அவருக்கு ஒரு கண் மற்றும் ஒரு கை முழுவதுமாக செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

  அமெரிக்காவில் நியூயார்க் மாகாணம் சௌதாகுவா நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி இலக்கிய கருத்தரங்கில் இந்திய வம்சாவளி எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பங்கேற்றுள்ளார். அப்போது அவர் மேல் தாக்குதல் நடத்தப்பட்டது. ஹாதி மாதர் என்ற 24 வயதான இளைஞன் ஒருவர் எழுத்தாளரை மேடையில் கத்தியால் தாக்கியுள்ளார்.

  அதில் மார்பு பகுதி, கழுத்து, கண் போன்ற பகுதிகளில் படுகாயமடைந்தார். அதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் ஒரு கண் பார்வையை முழுமையாக இழந்துள்ளதாகவும், ஒரு கை செயலிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  Also Read : பிரிட்டன் பிரதமருமான போட்டியில் ரிஷி சுனக் முன்னிலை... பின் வாங்கிய போரிஸ் ஜான்சன் - அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

  எழுத்தாளர் சல்மான் ருஷ்டி 1988 இல் சாத்தானின் வேதங்கள் ( The Satanic Verses) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் அவர் இஸ்லாமியர்கள் பற்றி தவறாக எழுதியதாகக் கூறி அவர் மேல் பெரும் எதிர்ப்பு அலைகள் கிளம்பியது. அதனையடுத்து அவர் சுமார் 10 ஆண்டுகள் தலைமறைவாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.

  இந்த நிலையில், அவரின் மேல் கோபம் கொண்ட நபர் ஒருவர் அந்த தாக்குதலை நடத்தியுள்ளார். அந்த சம்பவத்திற்குப் பின்பு அவரின் உடல் நிலையில் பற்றி தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவரின் புத்தகம் இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Janvi
  First published:

  Tags: America, Writer