முகப்பு /செய்தி /உலகம் / வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை வரவேற்க ஆஸ்திரேலியாவின் பழைய நாடாளுமன்ற வளாகம் மூவர்ண விளக்குகளால் அலங்காரம்!

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை வரவேற்க ஆஸ்திரேலியாவின் பழைய நாடாளுமன்ற வளாகம் மூவர்ண விளக்குகளால் அலங்காரம்!

ஆஸ்திரேலிய பாராளுமன்றம்

ஆஸ்திரேலிய பாராளுமன்றம்

தற்போது அவர் 13 வது வெளியுறவு மந்திரிகளின் கட்டமைப்பு உரையாடலை (FMFD) ஆஸ்திரேலிய அமைச்சர் பென்னி வோங்குடன் நடத்தினார்.

  • Last Updated :
  • Chennai, India

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திங்கள்கிழமை அரசுமுறை பயணமாக ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவுக்கு சென்றுள்ளார். அவரை வரவேற்கும் விதமாக ஆஸ்திரேலியாவின் பழைய பாராளுமன்ற கட்டிடம் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று ஆஸ்திரேலிய தலைமையுடனான தனது பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, ஜெய்சங்கர் பாராளுமன்ற கட்டிடத்தின் படத்தைப் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த ஆண்டில் வெளியுறவு அமைச்சரின் இரண்டாவது ஆஸ்திரேலியா பயணம் இது. முதலாவதாக ஜப்பான், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் இணைந்து ஆண்டுதோறும் நடக்கும் குவாட்(QUAD) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள பிப்ரவரி 2022 இல் மெல்போர்னுக்கு சென்றார். தற்போதைய பயணத்தின் போது, ​​ஜெய்சங்கர் கான்பெராவில் இருப்பார், பின்னர் சிட்னிக்கு செல்வார் என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.

ஆப்ரேஷனுக்கு பிறகு நோயாளி மரணம்.. இந்திய வம்சாவளி மருத்துவர் மீது கொலைக் குற்றம் - தென்னாப்பிரிக்காவில் பரபரப்பு

தற்போது அவர் 13 வது வெளியுறவு மந்திரிகளின் கட்டமைப்பு உரையாடலை (FMFD) ஆஸ்திரேலிய அமைச்சர் பென்னி வோங்குடன் நடத்தினார். அதில், இந்தோ-பசிபிக் பிராந்தியம் மறுவடிவமைக்கப்படுவதை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் அங்கீகரிப்பதை உறுதி செய்தனர். இரு நாடுகளின் நலனுக்காகவும் இதை ஒன்றாகக் கடந்து செல்ல வேண்டும் என்று வோங் கூறினார்.

இந்தியாவுடனான கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய வோங், "ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, இந்தியாவுடனான இந்த கூட்டாண்மை , நாங்கள் விரும்பும் பிராந்தியத்தை வடிவமைப்பதில் முக்கியமான பகுதியாகும்" என்று கூறினார்.

top videos

    ஜெய்சங்கர் ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும்போது, ​​ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸையும் சந்திக்கிறார்.

    First published:

    Tags: Australia, External Minister jaishankar