ஆஸ்திரேலியாவில் நடைமுறைக்கு வருகிறது புதிய 'பெற்றோர் விசா’

ஆஸ்திரேலியாவில் உள்ள தங்களது குடும்பங்களை பார்க்க பெற்றோருக்கு புதிய வழியை இவ்விசா கொடுக்கும் என குடிவரவுத்துறை அமைச்சர் டேவிட் கோல்மேன் தெரிவித்துள்ளார்.

news18
Updated: December 2, 2018, 4:16 PM IST
ஆஸ்திரேலியாவில் நடைமுறைக்கு வருகிறது புதிய 'பெற்றோர் விசா’
மாதிரிப் படம்
news18
Updated: December 2, 2018, 4:16 PM IST
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் வெளிநாட்டினர், தங்களது பெற்றோரை அந்நாட்டுக்குள் அழைப்பதற்கான புதிய தற்காலிக பெற்றோர் விசா  நடைமுறைக்கு வர இருக்கின்றது.

இதுதொடர்பான குடிவரவுத் துறை திருத்த மசோதாவை, கடந்த 2016-ம் ஆண்டு லிபரல் அரசு முன்மொழிந்திருந்தது. தற்போது அந்த மசோதா, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.

இதன்மூலம், ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசித்து வரும் வெளிநாட்டினர் நீண்டகாலமாக எதிர்பார்த்து வந்த விசா நடைமுறை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

''ஆஸ்திரேலியாவில் உள்ள தங்களது குடும்பங்களை பார்க்க பெற்றோருக்கு புதிய வழியை இவ்விசா கொடுக்கும். இது ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான சமூக பலன்களை அளிக்கும்’’ என குடிவரவுத்துறை அமைச்சர் டேவிட் கோல்மேன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஆஸ்திரேலியாவில் குடியுரிமைப் பெற்றவர்கள் மற்றும் நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெற்ற வெளிநாட்டினர் தங்களது பெற்றோரை 3 ஆண்டுகள் தற்காலிக விசாவில் வரவழைக்க 5000 ஆஸ்திரேலிய டாலர்கள் (இந்திய மதிப்பில் இரண்டரை லட்சம் ரூபாய்) செலுத்த வேண்டும்.

அதேபோல், 5 ஆண்டுகள் விசாவுக்கு 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் வசிக்க வேண்டுமென்றால் கூடுதலாக 5 லட்சம் ரூபாய் விசா கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால், அவர்கள் ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

அதே சமயம், இவ்விசா கட்டணம் மிகவும் அதிகமானது எனக் கருதுகின்றனர் இத்துறை சார்ந்த நிபுணர்கள். அத்துடன், இவ்விசாவில் வரக்கூடியவர்கள் மெடிகேர் (Medicare) எனப்படும் அரசின் மருத்துவ சேவைகளை பெற முடியாது. அவர்கள் தங்களுக்கென தனியார் மருத்துவக் காப்பீட்டை கொண்டிருக்க வேண்டும். இவ்விசாவில் வரக்கூடிய பெற்றோருக்கு ஆஸ்திரேலியாவில் ஏற்படுகின்ற எந்தவொரு மருத்துவ செலவுகளுக்கும் அவர்களது பிள்ளைகளே பொறுப்பேற்க வேண்டும்.
Loading...
இந்த விசாவில் தற்போது செய்யப்பட்டுள்ள திருத்தங்களை எதிர்த்துள்ள ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியான லேபர் கட்சி, இந்த விசா தொடர்பாக 2016 தேர்தலுக்கு முன்பு லிபரல் கட்சி அளித்த உறுதியின்படியே இவ்விசாவை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 33,310 இந்தியர்களுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2012-ம் ஆண்டு கணக்குப்படி, ஆஸ்திரேலியாவில் உள்ள தங்களது பிள்ளைகளை பார்க்க ஆண்டுதோறும் 35,000 பேர் பெற்றோர் விசாவுக்கு விண்ணப்பிக்கின்றனர்.

Also watch

First published: December 2, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...