ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்த கண்டத்தின் உச்சி முதல் பாதம் வரை 150 நாட்கள் தினம்தோறும் தொடர்ந்து ஓடி சுற்றி மராத்தான் ஓட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளார். 32 வயதான எரிகானா முர்ரே(Erchana Murray) 5 மாதங்களுக்கு முன்னர் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி வடக்கு எல்லை முனையான கேப் யார்க் பகுதியில் தனது மராத்தான் ஓட்டத்தை தொடங்கினார்.
அன்று தொடங்கி தினம் தோறும் மராத்தான் ஓட்டமாக ஆஸ்திரேலிய கண்டத்தின் உச்சியில் இருந்து தெற்கே எல்லை வரை ஓடிவந்துள்ளார். சுமார் 6,300 கிமீ தூரத்தை 150 நாள்களில் கடந்து புதிய கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார் முர்ரே. நாள்தோறும் 42 கிமீ என்ற சாரசரியில் நேற்று தெற்கு எல்லையான மெல்பார்னில் நேற்று தனது 150 நாள் மராத்தான் பயணத்தை வெற்றிகரமாக முடித்தார்.
இதற்காக கடந்த ஆறு மாதங்களில் 10 ஜோடி ஷூக்களை இவர் பயன்படுத்தியுள்ளார். நாள்தோறும் 6,000 கலோரி உணவு இவர் உட்கொள்ள தேவைப்பட்டது. அடர்ந்த காடுகள், கடற்கரை மணல்கள், புழுதி படந்த சாலைகள், சமவெளிகளில் ஆஸ்திரேலிய கண்டத்தை தனது இரு கால்களால் கடந்து மாபெரும் சாகச பயணத்தை முர்ரே மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ஸ்விக்கி பையுடன் 20 கிமீ நடை.. குடும்பத்தை தனி ஒருத்தியாய் காப்பாற்றும் நம்பிக்கை தாயின் கதை!
இந்த சாகச பயணத்தில் காட்டெருமை, முதலை போன்ற விலங்குகளின் அச்சுறுத்தல்களையும் இவர் சந்தித்துள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு ஆர்வலாளரான இவர், தனது மராத்தான் ஓட்டம் மூலம் இதுவரை ஒரு லட்சத்து 5 ஆயிரம் டாலர் நிதி திரட்டியுள்ளார். உலகிலேயே மாபெரும் சுற்றுச்சூழல் பேரழிவை ஆஸ்திரேலியா தான் சந்திக்கிறது என்று கூறும் முர்ரே, நாட்டின் இயற்கை வளங்களை காப்பதே எனது நோக்கம் என்றுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Australia, Guinness, Record, Running, World record