முகப்பு /செய்தி /உலகம் / கல்யாணம் பண்ணிக்கலாமா..! நாடாளுமன்றத்தில் காதலை சொன்ன எம்.பி.. ஆஸ்திரேலியாவில் சுவாரஸ்யம்..

கல்யாணம் பண்ணிக்கலாமா..! நாடாளுமன்றத்தில் காதலை சொன்ன எம்.பி.. ஆஸ்திரேலியாவில் சுவாரஸ்யம்..

எம்.பி. நாதன் லாம்பர்ட்

எம்.பி. நாதன் லாம்பர்ட்

எம்.பி. லாம்பர்டினுக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில், அவரது காதலை ஏற்றுக் கொண்டார் நோவா எர்லிச்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaAustraliaAustralia

ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற உரையின் போதே, எம்.பி. ஒருவர் காதலியான சக எம்.பி.யை, திருமணம் செய்து கொள்ள விருப்ப அழைப்பு விடுத்துள்ள சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வு குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விக்டோரியா மாகாணத்தை சேர்ந்த தொழிலாளர் கட்சி எம்.பி.யான நாதன் லாம்பர்ட், நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது யாருமே எதிர்பாராத வகையில், தனது காதலியான எம்.பி. நோவா எர்லிச்சை பார்த்து, நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் என குறிப்பிட்டார்.

மேலும் தற்போது மோதிரம் கொண்டு வரவில்லை என்றும், பின்னிரவில் அதை தருவதாகவும் எம்.பி. அன்பை வெளிப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற அவையில் இருந்த அனைவரும் கரவொலி எழுப்பி எம்.பி.யின் காதலை உற்சாகப்படுத்தினர்.

எம்.பி. லாம்பர்டினுக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில், அவரது காதலை ஏற்றுக் கொண்ட நோவா எர்லிச் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Australia, Love proposal