’சமையலறை ஜன்னல் வழியாக அன்பும், காபியும்’ - ஊரடங்கு காலத்தில் அனைவருக்கும் இலவசமாக காபி வழங்கிய ஆஸ்திரேலியர்..

கொரோனா ஊரடங்கு காலத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஆஸ்திரேலியாவில் தனது சேமிப்புகளைக் கொண்டு ஒருவர் இலவச உணவகம் திறந்திருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

’சமையலறை ஜன்னல் வழியாக அன்பும், காபியும்’ - ஊரடங்கு காலத்தில் அனைவருக்கும் இலவசமாக காபி வழங்கிய ஆஸ்திரேலியர்..
ரிக் எவரெட்டின் கிச்சன் ஜன்னல்
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 12:40 PM IST
  • Share this:
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிக் எவரெட் என்பவர் சிட்னியிலுள்ள தனது வீட்டின் கிச்சன் ஜன்னலில், வைரஸை எதிர்த்துப் போராட இலவச காபி வழங்கப்படும் என எழுதி கேட்கும் எல்லோருக்கும் காபி வழங்கி வருகிறார். மார்ச் மாதம் கொரோனா நோய்த்தொற்றின்போது வேலை இழந்த ரிக்கிற்க்கு, அதிக நேரம் இருந்ததால் மற்றவர்களுக்கு உதவலாம் என்று நினைத்து, தனக்கு குக்கிங்கில் ஆர்வம் உள்ளதால் சாக்லேட், காபி கடை மற்றும் பீஸ்ஸா உணவகத்தை நடத்த முடிவெடுத்தார்.

ரிக் உணவகத்தைத் திறந்தது வியாபாரத்திற்காக மட்டுமின்றி, இந்த இக்கட்டான நேரத்தில் ஏதாவது செய்ய விரும்புவதாகவும் மக்களைச் சந்தித்து நட்பாகப் பேசி தனது நேரத்தைச் செலவழிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார். இந்தக் கடையில் நான் எதையும் விற்கவில்லை, என்னைத் தேடி வருபவர்களுக்கு இது ஒரு பரிசு, மக்களிடமிருந்து ஒரு புன்னகை மட்டுமே தனக்குப் போதும் என்கிறார் ரிக்.

அவரது அண்டை வீட்டாருக்குக் கூட அவரைத் தெரியாமல் இருந்த நிலையில், இப்போது பலரும் அவருக்கு வணக்கம் சொல்லத் தொடங்கியுள்ளனர். இது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகக் கூறுகிறார் ரிக். அவரது கடை மெனுவில் கேப்பிச்சினோ, சாய் லேட் மற்றும் ஹாட் சாக்லேட் ஆகியவை உள்ளன. காபியுடன் பேக்கடு பிஸ்கட்டையும் ரிக் வழங்குகிறார்.


இதுகுறித்து பேசிய அவர், இதில் அழகான அம்சம் என்னவென்றால், மக்கள் என்னிடம் பேசுவதற்காகவே காபி அருந்த வருகிறார்கள். அவர்களுக்கு காபியைக் காட்டிலும் என்னுடன் உரையாடுவதே மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது என்றார்.Also read: சிசிடிவி பொருத்தப்பட்ட பிறகு சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளன - டி.ஐ.ஜி. எழிலரசன் தகவல்

வளர்ப்புப் பிராணிகளை விரும்பும் ரிக் எவரெட், இரண்டு புறாக்களையும், பூனையையும் தத்தெடுத்த வளர்த்து வருகிறார். தன் கடைக்கு வருகை தருவோரிடம் செல்லப்பிராணிகளைப் பற்றி அவர் அடிக்கடி உரையாடுவார். இப்படியெல்லாம் செய்வதன் மூலம் கசப்பான தருணத்திலிருந்து விலகி, தன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயற்சிப்பதாக அவர் தெரிவிக்கிறார்.ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் ’ஜாப் கீப்பர் பேமெண்ட்’ எனும் திட்டம் கொரோனா நோய்த்தொற்றால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டது. அதற்கு ரிக் எவரெட் தன் பங்களிப்பையும் செலுத்தி வருகிறார்.

தன் வீட்டு முன்பு மக்களுக்கு உணவு வழங்கும் வகையில் புதிய திட்டமொன்றை ரிக் ஆரம்பித்துள்ளார். அவரது இந்த சமீபத்திய திட்டமானது, அவரது வீட்டிற்கு வெளியே ஒரு குளிர்சாதனப் பெட்டியில் குளிர்பானங்களை நிரம்பி மக்களுக்காக வைத்திருப்பதாகும். இதுகுறித்து பேசிய ரிக் எவரெட்,"நான் ஒரு பெரிய விஷயத்தைச் செய்து கொண்டிருப்பதாக ஒருபோதும் நினைத்ததில்லை. இவை எனக்கு மிகவும் எளிதானவை. மக்களிடமிருந்து இதனால் எனக்குப் பணம் கிடைக்காதுதான். என்றாலும், அவர்களால் முடிந்த சின்னச் சின்ன வகையில் எனக்கு உதவ நினைப்பார்கள்" என்று கூறினார்.
First published: September 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading