முகப்பு /செய்தி /உலகம் / தங்கம் என்று நினைத்து எரிகல்லை வீட்டில் வைத்திருந்த நபர்? நடந்தது என்ன?

தங்கம் என்று நினைத்து எரிகல்லை வீட்டில் வைத்திருந்த நபர்? நடந்தது என்ன?

Mysterious Stone

Mysterious Stone

ஆராய்ச்சியாளர்கள் அந்த கல்லை பரிசோதித்து விட்டு, இந்த கல் வானத்தில் இருந்து பூமிக்கு வந்துள்ளது. இது ஒரு 'எரிகல்' என்கிற ஆச்சரியமான உண்மையை கூறினார்கள்.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

பொதுவாக நம் வீட்டில் வைத்திருக்கும் பழங்கால பொருட்களுக்கு பெரிய மதிப்பு இருக்கும். ஆனால் அதன் மதிப்பை நாம் உணராமல் சாதாரண பொருட்களை போன்று அவற்றை  போட்டு வைத்திருப்போம். இது போல உலகளவில் வீடுகளில் உள்ள பல்வேறு பழங்கால  பொருட்களின் மதிப்பை நாம் அறிந்திருப்பதில்லை. இப்படியொரு நிகழ்வு தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபருக்கும் நடந்துள்ளது.

டேவிட் ஹோல் என்பவர் ஆஸ்திரேலியாவில் உள்ள மேரிபோரோ பிராந்திய பூங்காவிற்கு 2015 ஆம் ஆண்டு தங்கத்தை தேடி சென்றுள்ளார். இந்த பூங்காவானது 19 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய தங்க வேட்டை இடமாக இருந்தது. தங்கத்தை தேடி சென்ற டேவிட்டிற்கு அந்த இடத்தில் வித்தியாசமான கல் ஒன்று கிடைத்து. இது பார்ப்பதற்கு மிக திடமான கல்லாக இருந்துள்ளது.

இந்த கல் தங்கமாக இருக்கும் என்று நினைத்து கொண்டு அதை தனது வீட்டிற்கு டேவிட் எடுத்து சென்றுள்ளார். சுமார் 6 ஆண்டுகளாக இந்த கல்லை தனது வீட்டு அறையில் வைத்து வந்துள்ளார். சமீபத்தில் ஒரு நாள் அவர் தேடி எடுத்த அந்த கல் தங்கம் இல்லை என்று தெரிய வந்தது. மேலும் அந்த கல்லானது 4.6 பில்லியன் ஆண்டு கால பழமையான எரிகல் என்று டேவிட் கண்டறிந்தார்.

Also read:   மகனுக்காக வீடு அல்ல கோட்டையே கட்டித்தந்த தந்தை– பிரபலமாகி வரும் சுற்றுலாத்தலம் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

டேவிட் இந்த கல்லை முதன்முதலில் கண்டடைந்த போது இதற்குள் தங்க கட்டி இருக்கும் என்று நினைத்துள்ளார். எனவே இதை உடைத்து பார்த்தால் அதிலுள்ள தங்கத்தை வெளியில் எடுத்து விடலாம் என்று அவர் எண்ணியுள்ளார். ஆனால் டேவிட்டால் அந்த கல்லை உடைக்க முடியவில்லை. எனவே அதை அப்படியே தனது வீட்டு அறையில் 6 வருடமாக வைத்து வந்துள்ளார்.

சமீபத்தில் இந்த பாறை கல்லை ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் அருங்காட்சியகத்திற்கு எடுத்து சென்று பரிசோதிக்க நினைத்துள்ளார். அங்கு அவர் எதிர்பாராத நிகழ்வு ஒன்று நடந்தது. அங்கிருந்த ஆராய்ச்சியாளர்கள் அந்த கல்லை பரிசோதித்து விட்டு, இந்த கல் வானத்தில் இருந்து பூமிக்கு வந்துள்ளது. இது ஒரு 'எரிகல்' என்கிற ஆச்சரியமான உண்மையை கூறினார்கள்.

Also read:   சிறுமியின் தொலைந்த பொம்மை சமூகவலைத்தளத்தால் மீண்டும் கிடைத்தது - வைரலான தந்தையின் பதிவு

மெல்போர்ன் அருங்காட்சியகத்தில் 37 ஆண்டுகளாக பணிபுரியும் டெர்மட் ஹென்றி என்கிற புவியியலாளர் இந்த கல்லை பரிசோதித்து விட்டு, "இந்த கல்லானது செதுக்கப்பட்ட, பள்ளமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. இவை வளிமண்டலத்தின் வழியாக வரும்போது உருவாகிறது, வெளிப்பகுதியில் உருகிய நிலையில் இருந்துள்ளது, மேலும் வளிமண்டலம் அவற்றை இது போன்று மாற்றியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாறை கல்லை தற்போது மேரிபோரோ எரிகல் என்று அழைக்கின்றனர். இது 17 கிலோ எடை கொண்டது. இரும்பு மற்றும் நிக்கல் ஆகிய அடர்ந்த தன்மை கொண்ட மூலப்பொருட்கள் இதில் இருப்பதால் இவ்வளவு எடை கொண்டுள்ளது. மிக தடிமனான வைரத்தினால் ஆன ரம்பத்தை பயன்படுத்தி இந்த கல்லின் முனையை ஹென்றி அறுத்து பார்த்தார். அப்போது அதை பார்ப்பதற்கு வெள்ளி மழை துளிகளை போன்று காட்சியளித்ததாக அவர் கூறியுள்ளார்.

First published:

Tags: Australia