ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் டெல்டா வகை கொரோனா வைரஸ் - இந்த ஆண்டில் இல்லாத அளவு பாதிப்பு

மாதிரிப் படம்

டெல்டா வகை வைரஸ் தொற்று காரணமாக, ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

 • Share this:
  உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று, ஆஸ்திரேலியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. டெல்டா வகை வைரஸ் தொற்று காரணமாக, சனிக்கிழமை ஒரே நாளில் 361 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர். நாட்டின் மக்கள்தொகையில் 60 சதவீதத்தைக் கொண்டுள்ள நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, குயின்ஸ்லாந்து ஆகிய மாகாணங்களில் மட்டும் இந்த அளவுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  சிட்னியை தலைநகராகக் கொண்ட நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் மட்டும் 319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  விக்டோரியா மாகாணத்தில் 29 பேருக்கும், குயின்ஸ்லாந்து மாகாணத்தில் 13 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சிட்னி, பிரிஸ்பேன் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து மெல்போர்னில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மெல்போர்ன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 7 வாரங்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று விக்டோரிய மாநில ஆளுநர் டேனியல் ஆண்ட்ரூஸ் அறிவித்துள்ளார்.

  அதேநேரம், குயின்ஸ்லாந்தில் 8 நாட்களாக அமலில் உள்ள ஊரடங்கை, ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு திரும்பப் பெற அரசு திட்டமிட்டுள்ளது. மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஆஸ்திரேலியாவில் பரவல் குறைவாக உள்ளபோதிலும், தடுப்பூசி போடும் பணி மந்தமாகவே நடைபெற்று வருகிறது. 16 வயதுக்கும் மேற்பட்டோரில் 20 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். எனவே, கொரோனா தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனிடையே, கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு ரயில் மூலம் கடந்த வாரத்தில் பயணம் மேற்கொண்டது தெரியவந்துள்ளது. அந்த ரயிலில் பயணம் மேற்கொண்ட அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதுடன், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

   
  Published by:Karthick S
  First published: