ஹோம் /நியூஸ் /உலகம் /

பெண்களை விளையாட அனுமதிக்காவிட்டால் ஆப்கானிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை- தாலிபான்களுக்கு ஆஸ்திரேலியா எச்சரிக்கை

பெண்களை விளையாட அனுமதிக்காவிட்டால் ஆப்கானிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை- தாலிபான்களுக்கு ஆஸ்திரேலியா எச்சரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பெண்களை விளையாட அனுமதிக்காவிட்டால் ஆப்கானிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகள் இல்லை என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைத்துள்ளதை தொடர்ந்து அங்கு அல்-காய்தா பயங்கரவாதிகள் எழுச்சி பெறும் வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஆப்கன் பெண்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதி இல்லை என தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

  ஆப்கானிஸ்தானை வன்முறை மூலம் கைப்பற்றிய தாலிபான்கள் புதிய ஆட்சியை அமைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து, அங்குள்ள பெண்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என கூறியுள்ளனர். பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் தேவையற்றவை என்றும் விளையாடும் போது முகம் மற்றும் உடலின் சில பகுதிகள் வெளியில் தெரியும் என்றும் தாலிபான்களின் கலாசார குழுவின் துணை தலைவர் அமனுல்லா வாஷிக் தெரிவித்துள்ளார்.

  பெண்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது, இஸ்லாத்திற்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆப்கன் பெண்களை விளையாட அனுமதிக்காவிட்டால், அந்நாட்டுடனான கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

  ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நவம்பர் மாதம் 27 - ஆம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்து. இந்நிலையில் இந்த போட்டி ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

  இதனிடையே ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைத்துள்ளதை தொடர்ந்து அங்கு அல்-காய்தா பயங்கரவாதிகள் எழுச்சி பெறும் வாய்ப்புள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் எச்சரித்துள்ளார். அமெரிக்க மற்றும் உலக நாடுகள் மீது அல்-காய்தா தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மோசமாக ஆட்சி நடைபெறும் நாடுகளில் அல்-காய்தா இயக்கம் வலுப்பெற்று உலக நாடுகளை அச்சுறுத்தும் என்றும், அது அந்த இயக்கத்தின் இயற்கையான குணம் என்றும் ஆஸ்டின் தெரிவித்தார். கடந்த ஆண்டு தாலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஆப்கானிஸ்தானில் அல்-காய்தா இயக்கம் வேரூன்ற அனுமதிக்க மாட்டோம் என தாலிபான்கள் உறுதி அளித்திருந்தனர்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Afghanistan, Australia, Taliban