ஆஸ்திரேலிய நாட்டுக்கான விசா பெறுவதற்கு அந்நாட்டு அரசு கட்டண சலுகைகள் அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட சாதனை எண்ணிக்கையிலான வேலை காலியிடங்களை உடனடியாக நிரப்பும் முயற்சியாக விசா பெறுவதற்கான கட்டணத்தில் சலுகை அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய அரசு.
மாணவர் விசா அல்லது வேலை விடுமுறை விசா (working holiday visa) மூலம் ஆஸ்திரேலியாவில் நுழைய விரும்புபவர்களுக்கு விசா கட்டணத்தில் சலுகை தரப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். புதிய வருகைகள் ஆஸ்திரேலியாவின் "முக்கியமான தொழிலாளர் பற்றாக்குறையை", குறிப்பாக விருந்தோம்பல் மற்றும் விவசாயத்துறைகளில் நிரப்ப உதவும் என்று தான் நம்புவதாக மோரிசன் கூறினார்.
Also read:
பாஜகவின் பதிலடி - கடும் அதிர்ச்சியில் அகிலேஷ் யாதவ்...
ஆஸ்திரேலியாவின் கான்பரே நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் ஸ்காட் மோரிசன், அடுத்த 8 வாரங்களுக்கு மாணவர்கள் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கும், வேலை விடுமுறை விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அடுத்த 12 வாரங்களுக்கும் கட்டண சலுகை அளிக்கப்படும் நான் கூறுவதெல்லாம் விரைவாக ஆஸ்திரேலியா வாருங்கள் என்பதே ஆகும் என ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய அரசின் இந்த சலுகைகள் காரணமாக 1,75,000 பேர் வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல அரசுக்கு 55 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது.
கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் ஆஸ்திரேலிய பொருளாதாரம் மிகுந்த நெருக்கடியை சந்தித்து வருகிறது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் நடைமுறையின் காரணமாக நாடு முழுவதும் விநியோக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சூப்பர் மார்க்கெட் அலமாரிகள் காலியாக காட்சியளிக்கின்றன. பல உணவு மற்றும் தளவாட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களில் 10% முதல் 50% வரை எந்தவொரு நாளிலும் வேலையில் இருந்து விலகியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Also read:
உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியமைக்கும் - கருத்துக் கணிப்பில் தகவல்
சமீபத்திய கோவிட்-19 பரவலுக்கு முன், ஆஸ்திரேலியாவின் வேலை காலியிடங்கள், நவம்பர் வரையிலான மூன்று மாதங்களில் 18.5% அதிகரித்து கிட்டத்தட்ட 400,000 ஆக உயர்ந்துள்ளது. வேலையின்மை விகிதம் முந்தைய இரண்டு மாதங்களில் உயர்ந்த பிறகு நவம்பரில் 4.6% ஆகக் குறைந்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அந்தோனி அல்பானீஸ், ஆஸ்திரேலியா "வெளிநாட்டுத் தொழிலாளர்களை மிகவும் நம்பியிருக்கிறது" என விமர்சித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.