முகப்பு /செய்தி /உலகம் / இந்தியக் கொடியுடன் ஆர்பாட்டம்.. துரத்திச் சென்று தாக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. ஆஸ்திரேலியாவில் பரபரப்பு..!

இந்தியக் கொடியுடன் ஆர்பாட்டம்.. துரத்திச் சென்று தாக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. ஆஸ்திரேலியாவில் பரபரப்பு..!

ஆஸ்திரேலியா போராட்டம்

ஆஸ்திரேலியா போராட்டம்

ஆஸ்திரேலியாவில் இந்திய கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaAustraliaAustralia

ஆஸ்திரேலியாவில் கடந்த 15 நாட்களில் 3 இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன. மேலும் இந்துக்களுக்கு எதிராகவும், காலிஸ்தானிற்கு ஆதரவாகவும் கோயில் சுற்றுச்சுவரில் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்து கோயில்களை சேதப்படுத்தியதை கண்டித்து, ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்கள் தேசியக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கூடிய காலிஸ்தான் அமைப்பினர் இந்தியர்களை கத்தியால் தாக்கினார்.

மேலும் இந்திய கொடியுடன் இருந்தவர்களை காலிஸ்தான் அமைப்பினர் துரத்தி சென்று தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது.

First published:

Tags: Australia, INDIAN