முகப்பு /செய்தி /உலகம் / மின்சாரம் தயாரிக்கும் பாக்டீரியாக்கள்... அற்புத அதிசயத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்..!

மின்சாரம் தயாரிக்கும் பாக்டீரியாக்கள்... அற்புத அதிசயத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்..!

மாதிரி படம்

மாதிரி படம்

Bacterial Enzyme that turns air into Electricity | இச்சோதனை வெற்றி பெற்றால், பாக்டீரியா மூலம் மின்சார தயாரிப்பதற்கு வானம் தான் எல்லை என்பதை மறுப்பதற்கு இல்லை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • international, Indiasydneysydneysydney

மின்சாரம் தயாரிக்க என்னவெல்லாம் வழிகள் உள்ளன என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் விஞ்ஞானிகள், மண்ணில் இருக்கும் பாக்டீரியாவில் இருக்கும் ஒரு வகை என்சைம்கள் காற்றில் இருந்து மின்சாரம் தயாரிப்பதாக கண்டறிந்து உள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள மொனாஷ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழு, மின்சாரம் குறித்த ஆராய்ச்சில் ஈடுபட்டு இருந்த போது, இதை கண்டறிந்துள்ளது. மண்ணில் இருக்கும் பாக்டீரியாக்கள், காற்றில் உள்ள ஹைட்ரஜனை கொண்டு மின்சாரம் தயாரிக்கின்றன.

இதையும் படிங்க; நாடு முழுவதும் அதிகரிக்கும் காய்ச்சல்... மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்..!

அண்டார்டிகா மாதிரியான பிரதேசங்கள் தொடங்கி, எரிமலையை தன்னுள் வைத்திருக்கும் மலைகள் மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் வசிக்கும் பாக்டீரியாக்கள், காற்றில் இருக்கும் ஹைட்ரஜனை கொண்டு வளர்வது இயல்பான ஒன்று. ஆனால், அந்த ஹைட்ரஜனை எப்படி மின்சாரமாக மாற்றுகின்றன என்பதைதான் ஆய்வாளர்கள் தற்போது கண்டறிந்து உள்ளனர்.

பாக்டீரியாக்களில் உள்ள, ஹக் என்ற என்சைம்கள், மெல்லிய காற்றில் இருக்கும் ஹைட்ரஜனை பிரித்து எடுக்கின்றன. அந்த என்சைம்கள் மின்சாரத்தை தயாரித்து சேமித்து வைத்திருக்கும் நிலையில், அவைகளை தனியாக பிரிக்க முடியும் என அறிவியலாலர்கள் கூறுகின்றனர். நீண்ட காலத்திற்கு உறைந்த நிலையிலோ அல்லது 80 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலோ அந்த என்சைம்களை, அதில் இருக்கும் மின்சக்தி சேதம் அடையாமல் பாதுகாத்து வைக்க முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

அந்த என்சைம்களை ஒரு இயற்கை பேட்டரி என்று அழைக்கும் விஞ்ஞானிகள், முதற்கட்டமாக, சூரிய ஒளியில் இயங்கும் இயந்திரங்களை, இந்த வகை பாக்டீரியாவில் இருந்து தயாரிக்கும் மின்சாரத்தை கொண்டு இயக்க முடியும் என தெரிவித்துள்ளனர். இச்சோதனை வெற்றி பெற்றால், பாக்டீரியா மூலம் மின்சார தயாரிப்பதற்கு வானம் தான் எல்லை என்பதை மறுப்பதற்கு இல்லை

First published:

Tags: Australia, Bacteria, Electricity