ஹோம் /நியூஸ் /உலகம் /

’அழிய விட மாட்டோம்’..! வன உயிரினங்களை பாதுகாக்க பக்கா ப்ளான் போடும் ஆஸ்திரேலியா!

’அழிய விட மாட்டோம்’..! வன உயிரினங்களை பாதுகாக்க பக்கா ப்ளான் போடும் ஆஸ்திரேலியா!

உலகின் நிலப்பரப்பில் ஆறாவது பெரிய நாடான ஆஸ்திரேலியா, கோலாக்கள் மற்றும் பிளாட்டிபஸ் போன்ற தனித்துவமான விலங்குகளின் தாயகமாக உள்ளது.

உலகின் நிலப்பரப்பில் ஆறாவது பெரிய நாடான ஆஸ்திரேலியா, கோலாக்கள் மற்றும் பிளாட்டிபஸ் போன்ற தனித்துவமான விலங்குகளின் தாயகமாக உள்ளது.

உலகின் நிலப்பரப்பில் ஆறாவது பெரிய நாடான ஆஸ்திரேலியா, கோலாக்கள் மற்றும் பிளாட்டிபஸ் போன்ற தனித்துவமான விலங்குகளின் தாயகமாக உள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • internationa, IndiaAustraliaAustraliaAustralia

  உலகில் வேறு எங்கும் காணப்படாத உயிரினங்களுக்காகவும் புகழ்பெற்ற தீவுக் கண்டத்தில் உள்ள தாவரங்கள், விலங்குகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஆஸ்திரேலியா தனது நிலப்பரப்பில் குறைந்தது 30 சதவீத பகுதியை ஒதுக்கும் என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் டான்யா பிலிபர்செக் தெரிவித்துள்ளார்.

  மற்ற கண்டங்களை விட ஆஸ்திரேலியா அதிகமான பாலூட்டி இனங்களை சமீபத்தில் இழந்துள்ளது. உலகின் பணக்கார நாடுகளில் மிக மோசமான இனங்கள் வீழ்ச்சி ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்துள்ளது என கடந்த ஜூலை மாதம் அந்நாட்டு அரசால் வெளியிடப்பட்ட ஐந்தாண்டு சுற்றுச்சூழல் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

  அந்த அறிக்கை, 2016-ம் ஆண்டின் அறிக்கைக்குப் பின், அச்சுறுத்தப்பட்ட உயிரினங்கள் அல்லது அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் பட்டியலில் 8 சதவீதம் அதிகரித்துள்ளதை குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அதிகாரி ஒருவர் கூறுகையில், தாவரங்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையின் தேவை எப்போதும் இந்த அளவிற்கு அதிகமாக இருந்ததில்லை என்று கூறியுள்ளார்.

  110 இனங்கள் மற்றும் 20 இடங்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், பாதுகாப்பிற்காக நிர்வகிக்கப்படும் பகுதிகள் 50 மில்லியன் ஹெக்டேர்களாக அதிகரிக்கப்படும் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார். இந்த பத்தாண்டு திட்டம் 2027-ம் ஆண்டில் மதிப்பாய்வு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

  உலகின் நிலப்பரப்பில் ஆறாவது பெரிய நாடான ஆஸ்திரேலியா, கோலாக்கள் மற்றும் பிளாட்டிபஸ் போன்ற தனித்துவமான விலங்குகளின் தாயகமாக உள்ளது. இருப்பினும், அவற்றின் எண்ணிக்கை தீவிர வானிலை மாற்றங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களுக்குள் மனித அத்துமீறல் காரணமாக குறைந்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் ஆஸ்திரேலியா தனது கோலாக்களில் 30 சதவீதத்தை இழந்துள்ளதாக இயற்கை வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளதை அடுத்து, கிழக்கு கடற்கரையின் பெரும்பகுதியில் உள்ள கோலாக்கள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்குள் அழியும் அபாயத்தில் இருப்பதாக எச்சரித்துள்ளது.

  2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பேரழிவு-- புஷ்ஃபயர்ஸ் உட்பட பல பேரழிவுகள் பல லட்சக்கணக்கான விலங்குகள் மற்றும் ஜெர்மனியின் கிட்டத்தட்ட பாதி அளவிலான பகுதி தீக்கிரையானது ஆகிய அடிக்கடி ஏற்படும் தீவிர இயற்கை பேரிடர்களால் ஆஸ்திரேலியா சமீபத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

  மேலும், உலக வனவிலங்கு நிதியம் (WWF)-ஆஸ்திரேலியா அரசின் பாதுகாப்பு முயற்சிகளை வரவேற்றுள்ளது. ஆனால், அச்சுறுத்தலுக்கு உள்ளான ஒவ்வொரு உயிரினங்களுக்கும் காலக்கெடுவுக்குள் மீட்புத் திட்டங்களில் முதலீடு செய்ய அதிகாரிகளை அந்நாடு வலியுறுத்தியுள்ளது.

  Published by:Archana R
  First published:

  Tags: Australia