Home /News /international /

'ஜூலியன் அசாஞ்சேவிடம் புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட் உள்ளது’- ஆஸ்திரேலியா விளக்கம்

'ஜூலியன் அசாஞ்சேவிடம் புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட் உள்ளது’- ஆஸ்திரேலியா விளக்கம்

ஜூலியன் அசாஞ்சே

ஜூலியன் அசாஞ்சே

அசாஞ்சேவின் உடல் நிலையும் சிக்கலாகி உள்ள நிலையில் அவர் எளிதாக ஆஸ்திரேலியா பயணிக்க முடியாது எனக் கூறப்பட்டது.

  • News18
  • Last Updated :
’விக்கி லீக்ஸ்’ ஜூலியன் அசாஞ்சேவிடம் புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட் இருப்பதாக ஆஸ்திரேலியா விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்க அரசாங்கம், ராணுவம் குறித்த முக்கிய ரகசியங்களை வெளியிட்ட விவகாரத்தில் ஜூலியன் அசாஞ்சே உலகப் பிரபலம் ஆனார். ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவரான அசாஞ்சேவைக் கைது செய்ய அமெரிக்கா முயற்சித்து வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கக் கைதுக்குப் பயந்து லண்டனில் உள்ள ஈக்வேடார் நாட்டுத் தூதரகத்தில் அசாஞ்சே தஞ்சம் அடைந்தார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக ஈக்வேடார் தூதரகத்தில் உள்ள அசாஞ்சேவை பிரிட்டனிடம் ஒப்படைக்க ஈக்வேடார் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஒப்புக்கொண்டது. இந்நிலையில் அசாஞ்சேவின் பாஸ்போர்ட் வேலிடிட்டி முடிந்ததால் அவரது நிலை சிக்கலாகியது.

அசாஞ்சேவின் உடல் நிலையும் சிக்கலாகி உள்ள நிலையில் அவர் எளிதாக ஆஸ்திரேலியா பயணிக்க முடியாது எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது அசாஞ்சேவின் பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அசாஞ்சே ஆஸ்திரேலியாவுக்கு எவ்வித சிக்கலும் இன்றி வர முடியும் என்றும் ஆஸ்திரேலியா அரசாங்கம் விளக்கம் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க: VIDEO: ஹெச்.ராஜாவின் மொழிபெயர்ப்பில் சந்தேகமடைந்த அமித்ஷா
Published by:Rahini M
First published:

Tags: Julian assange

அடுத்த செய்தி