ஹோம் /நியூஸ் /உலகம் /

கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம்: நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை

கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம்: நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை

சுனாமி எச்சரிக்கை.

சுனாமி எச்சரிக்கை.

இந்த 7.7 ரிக்டர் அளவு பூகம்பத்துக்குப் பிறகு பின்னதிர்வுகளாக 5.7, 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தென் பசிபிக் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

  ரிக்டர் அளவுகோலில் 7.7 என்று பதிவான இந்த பூகம்பத்தினால் நியூஸிலாந்து, நியூகலேடோனியா, வனுவாத்து உள்ளிட்ட பிரதேசங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

  முதலில் ரிக்டர் அளவுகோலில் 7.2 என்று கூறப்பட்டது பிறகு 7.5 என்றும் பிறகு 7.7 என்றும் அதிகரிக்கப்பட்டது.

  10 கிமீ ஆழத்தில் ஏற்படும் இத்தகைய பெரிய பூகம்பங்களினால் கடலில் சுனாமி பேரலைகள் எழுந்து கடற்கரைகளைத் தாக்கும்.

  ஆஸ்திரேலியாவில் சுனாமி ஏற்பட்டதாக ஆஸ்திரேலிய வானிலை மையம் உறுதி செய்திருந்தது

  “சுனாமி உறுதி செய்யப்பட்டது. லார்ட் ஹோவ் தீவிற்கு ஆபத்து இருக்கிறது” என்று ஆஸ்திரேலிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  வியாழன் நள்ளிரவு அதாவது வெள்ளிக்கிழமை அதிகாலை 13.20 ஜிஎம்டி நேரப்படி நியு கலேடோனியாவின் கடலுக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் 7.7 ரிக்டர் அளவிற்கு பூகம்பம் ஏற்பட்டது.

  இதனையடுத்து அடுத்த 3 மணி நேரத்தில் சுனாமி பேரலைகள் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டது. பேரலைகள் 0.3 மீட்டர் முதல் 1 மீட்டர் வரை எழும்பும் என்று எச்சரிக்கப்பட்டது.

  நியூஸிலாந்து அரசும் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று மக்களை எச்சரித்துள்ளது. நியூஸிலாந்தின் தொலை வடக்குத் தீவின் வடக்குப்பகுதிக்கும் தி கிரேட் பேரியர் தீவு, நாட்டின் கிழக்குக் கடற்கரை பகுதிகளை சுனாமி தாக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

  ஆஸ்திரேலியாவின் சமோவா, குக் தீவுகள் பகுதியில் சிறிய அளவில் சுனாமி அலை இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பூகம்பத்தினால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

  பசிபிக் நெருப்பு வளையப் பகுதியான இங்கு அடிக்கடி கண்டப் பெரும்பாறைகள் நகர்வதும் ஒன்றையொன்று உரசுவதும், ஒன்றின் அடியில் ஒன்று செருகிக் கொள்வதும் அடிக்கடி நிகழ்கிறது.

  2018-ல் இந்தோனேசியாவின் சுலாவேசியில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் நிலநடுக்கம் மற்றும்  சுனாமிக்கு 4,300 பேர் பலியாகினர்.

  அதே போல் 2004-ல் இந்தோனேசியாவின் சுமத்ராவில் ஏற்பட்ட 9.1 பூகம்பத்தினால் ஏற்பட்ட மிகப்பெரிய தெற்காசிய சுனாமிக்கு 2,20,000 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.

  இந்த 7.7 ரிக்டர் அளவு பூகம்பத்துக்குப் பிறகு பின்னதிர்வுகளாக 5.7, 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Earthquake, Tsunami, Tsunami Alert