புதிய டாலர் நோட்டில் எழுத்துப்பிழை: 'I' எழுத்தைத் தவறவிட்ட ரிசர்வ் வங்கி!

ஆஸ்திரேலிய 50 டாலர் நோட்டு

50 டாலர் நோட்டுகளை ரிசர்வ் வங்கி ஆய்வு செய்த போது எழுத்துப்பிழை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆஸ்திரேலியாவில் புழக்கத்தில் விடப்பட்ட 50 டாலர் நோட்டுக்களில் எழுத்துப்பிழை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் 4 கோடியே 60 லட்சம் எண்ணிக்கையிலான நோட்டுக்கள் அழிக்கப்பட உள்ளன.

உலகம் முழுவதும் பணம் அச்சடிக்கப்படுவது பாதுகாப்பாகாவும், கவனத்துடன் நடைபெறும் விஷயம். புழக்கத்தில் விடப்பட்டுள்ள புதிய 50 டாலர் நோட்டுகளில் கவனக்குறைவாக இருந்ததால் எழுத்துப்பிழை ஏற்பட்டுள்ள சம்பவம் ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு ஆக்டோபர் மாதம் புதிய 50 டாலர் நோட்டுகள் அச்சிடப்பட்டன. மஞ்சள் நிறத்திலான இந்த நோட்டில் கீழ்பக்கத்தில் ‘responsibility’ என்ற வார்த்தை, ‘ responsibilty’ என்று எழுத்துப் பிழையுடன் அச்சிடப்பட்டுள்ளது. இந்தப் பிழையை அந்நாட்டு ரேடியா நிகழ்ச்சியின் போது ஒருவர் தெரிவித்துள்ளார்.

எழுத்துப்பிழை உடன் அச்சடிக்கப்பட்ட 50 டாலர் நோட்டு


இதனையடுத்து 50 டாலர் நோட்டுகளை ரிசர்வ் வங்கி ஆய்வு செய்த போது எழுத்துப்பிழை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்பின் 50 டாலர் நோட்டுகளில் உள்ள எழுத்துப்பழை சரிசெய்யப்பட்டு விரைவில் புதிய 50 டாலர் நோட்டுகள் வெளியிடப்படும் என ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Also Watch

Published by:Vijay R
First published: