மியான்மர் பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி (Aung San Suu Kyi) தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் கட்சி இரண்டாவது முறையும் வெற்றிபெற்றிருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் ஜனநாயக தேசிய லீக் கட்சி முன்னிலை வகிப்பதாகவும், ஆட்சியமைக்க தேவைப்படும் 322 நாடாளுமன்ற இடங்களைப் பெற்றுவிட்டதாகவும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி தன் நாட்டிலுள்ள ரோஹிங்கியா இன மக்களை இனப்படுகொலை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து உலக அரங்கில் அவரின் புகழ் சரியத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. எனினும், தன் நாட்டில் வெகுவான ஆதரவு பெற்று, கொரோனா அச்சத்தையும் தாண்டி மக்களால் வாக்களிக்கப்பட்டு வெற்றிபெற்றுள்ளார் சூகி.
Published by:Rizwan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.