முகப்பு /செய்தி /உலகம் / ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை - மியான்மர் நீதிமன்றம் உத்தரவு

ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை - மியான்மர் நீதிமன்றம் உத்தரவு

ஆங் சான் சூச்சி

ஆங் சான் சூச்சி

Myanmar Aung San Su ki | கடந்த டிசம்பர் மாதம் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. அதனை தொடர்ந்து பல்வேறு வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், 17 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அதிகரித்தது.

  • Last Updated :
  • inter, Indiamyanmarmyanmar

தேர்தலில் மோசடி செய்ததாக கூறி மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு கூடுதலாக 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மியான்மரின் இராணுவ ஆட்சியை எதிர்த்து பல பத்தாண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி. நவம்பர் 2020ல் நடந்த பொது தேர்தலில் இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.

இந்நிலையில் இதை ஏற்க மறுத்த அந்நாட்டு ராணுவம், இந்த தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்  மீண்டும் ஆட்சியை பிடித்து அதிகாரத்தை கைப்பற்றியது. அதன்பின்னர் ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

இதையும் வாசிக்க: ஈராக்கில் கலவரம்: 30க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

இதனை தொடர்ந்து, ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது, ஊழல் வழக்குகள், தேர்தல் மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு ஆங் சான் சூகி மீது வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான வழக்குகளை விசாரித்த மியான்மர் நீதிமன்றம், கடந்த டிசம்பர் மாதம் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. அதனை தொடர்ந்து பல்வேறு வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், 17 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை அதிகரித்தது.

top videos

    தற்போது தேர்தல் மோசடி செய்ததாக கூறப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதுவரை வீட்டுக்காவலில் மட்டும் இருந்த ஆங் சான் சூகிக்கு இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு கடின உழைப்பு தேவைப்படும் வேலைகள் செய்ய நிர்பந்திக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Court, Jail, Myanmar