ரஷ்யாவில் தொடங்கியது 11-வது அணுசக்தி மாநாடு!

இந்த ஆண்டில் முதல் முறையாக இரண்டு நாள் நிகழ்வுகள் அனைத்தும் சர்வதேச அணுசக்தி முகமையின் ஒத்துழைப்புடன் திட்டமிடப்பட்டுள்ளன.

news18
Updated: April 15, 2019, 7:43 PM IST
ரஷ்யாவில் தொடங்கியது 11-வது அணுசக்தி மாநாடு!
இந்த ஆண்டில் முதல் முறையாக இரண்டு நாள் நிகழ்வுகள் அனைத்தும் சர்வதேச அணுசக்தி முகமையின் ஒத்துழைப்புடன் திட்டமிடப்பட்டுள்ளன.
news18
Updated: April 15, 2019, 7:43 PM IST
ரஷ்யாவில் இரண்டு நாட்கள் நடைபெறும் அணுசக்தி மாநாட்டில், அணுக் கழிவுகளை எப்படி கையாள்வது என்பது குறித்தெல்லாம் விவாதிக்கப்படவுள்ளது. 

11-வது உலக அணுசக்தி மாநாடு மற்றும் கண்காட்சி (ATOMEXPO) ரஷ்யாவின் தெற்கு பகுதியில் இருக்கும் சோச்சி நகரில் இன்று தொடங்கியது. ரஷ்யாவின் அணு சக்திக் கழகமான ரோசடோம் (ROSATOM) மற்றும் ரஷ்ய அணு சக்தி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்த மாநாடு மற்றும் கண்காட்சி கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

அணு சக்தி மாநாடுஅணு சக்தியை மனிதர்கள் வாழ்விற்கு எந்த வகையில் சிறப்பாக பயன்படுத்த முடியும் என்பதே இந்த ஆண்டு நடக்கும் மாநாட்டின் முக்கிய கருதுகோளாக அமைந்துள்ளது. உலகளவில் அணுசக்தித் தொழில்நுட்பத்தை கையாண்டு வரும் நிறுவனங்கள், அரசாங்கங்கள், நிபுணர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு வருகின்றனர். ஏப்ரல் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் நடக்கும் இந்த நாட்டில் உலகளவில் 60 நாடுகளைச் சேர்ந்த 6000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆண்டில் முதல் முறையாக இரண்டு நாள் நிகழ்வுகள் அனைத்தும் சர்வதேச அணுசக்தி முகமையின் ஒத்துழைப்புடன் திட்டமிடப்பட்டுள்ளன. அணு சக்தித் துறையில் எப்படி மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, அணுவுலையில் பாதுகாப்பை எப்படி மேம்படுத்துவது? அணுக்கழிவுகளை எப்படி கையாள்வது? கார்பன் -டை-ஆக்சைடு வெளியீட்டை எப்படி கட்டுப்படுத்துவது? உலக வெப்பமயமாதலை அணுசக்தி தொழில்நுட்பத்தால் மின்சாரம் தயாரிப்பதன் மூலம் எப்படி கட்டுப்படுத்த முடியும் என்பது குறித்தெல்லாம் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.

மேலும், இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகள் ரஷ்ய அணு சக்திக் கழகத்துடன் அணு சக்தித் தொடரான ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளன. உலகளவில் அணு சக்தியை பயன்படுத்திவரும் நாடுகள் தங்களது புதிய தொழில்நுட்பங்களை கண்காட்சிக்கு வைத்துள்ளனர். இதற்கு வசதியாக 13 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் இந்த மாநாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Loading...

Also see:
First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...