தந்தையானார் மின்னல் மனிதர் உசைன் போல்ட்!

மின்னல் வேக மனிதன் தந்தையானதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

தந்தையானார் மின்னல் மனிதர் உசைன் போல்ட்!
உசைன் போல்ட் (கோப்புப்படம்)
  • Share this:
ஜமைக்கா நாட்டின் பிரதமர் Andrew Holness தனது ட்விட்டர் பக்கத்தில் எங்கள் நாட்டின் ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட் - கேசி பென்னட் இணையருக்கு பெண் குழந்தைப் பிறந்துள்ளது என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உசைன் போல்ட் ஒலிம்பிக் போட்டியில் வீழ்த்த முடியாத வீரனாக வலம்வந்தவர். தொடர்ந்து (2008, 12, 16) மூன்று ஒலிம்பிக் போட்டியிலும் 100 மீ, 200மீ என இரண்டிலும் தங்கப்பதக்கத்தைக் கழுத்தில் ஏந்தியதோடு, உலகச் சாதனையும் நிகழ்த்தியவர். மேலும் 100 மீ தொடர் ஓட்டப்பந்தயத்திலும் இரண்டு தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றி சாதனைக்கு மேல் சாதனை நிகழ்த்தியவர் அவர்.

ஓட்டப்பந்தயத்திற்கு விடை கொடுத்த போல்ட் தற்பொழுது கால்பந்து விளையாட்டில் களம் புகுந்துள்ளார். மின்னல் வேக மனிதன் தந்தையானதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.


Also see:
First published: May 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading