முகப்பு /செய்தி /உலகம் / 2 லட்சம் காண்டம் குவியலுக்கு நடுவே நடந்த பேஷன் ஷோ... குவியும் பாராட்டு... காரணம் இதுதான்..!

2 லட்சம் காண்டம் குவியலுக்கு நடுவே நடந்த பேஷன் ஷோ... குவியும் பாராட்டு... காரணம் இதுதான்..!

ஆணுறை குவியலுக்கு மத்தியில் பேஷன் ஷோ

ஆணுறை குவியலுக்கு மத்தியில் பேஷன் ஷோ

ஆண்டுதோறும் உலகில் நடைபெறும் டாப் 4 பேஷன் ஷோக்களில் மிலான் பேஷன் ஷோவும் ஒன்றாகும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, Indiamilanmilan

பேஷன் ஆடைகளுக்கு பெயர் போன நாடுகளில் இத்தாலி முதன்மையானது. இந்நாட்டில் தான் சர்வதேச அளவில் முன்னணி பேஷன் பிராண்டுகள் உள்ளன. அதுபோலவே இத்தாலியில் உள்ள மிலான் நகரில் நடைபெறும் மிலான் பேஷன் ஷோ மிகவும் புகழ் பெற்றது. ஆண்டுதோறும் உலகில் நடைபெறும் டாப் 4 பேஷன் ஷோக்களில் மிலான் பேஷன் ஷோவும் ஒன்றாகும்.

2023 மிலான் பேஷன் ஷோ இத்தாலி நகரில் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், பாலியல் சுகாதாரத்தை உணர்த்தும் விதமாக நடத்தப்பட்ட ஒரு பேஷன் ஷோ பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. முன்னணி ஆடம்பர ஆடை பிராண்ட் நிறுவனமான 'டீசல்'இந்த ஷோவை நடத்தியுள்ளது.

சர்வதேச அளவில் பாலியல் நோய் பரவல் தொடர்பான விழிப்புணர்வுகள், பரப்புரைகள் தீவிரமாக நடத்தப்படுகின்றன. இதை கண்டறிந்து கட்டுப்படுத்தவும் பல ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.  நாள்தோறும் சுமார் 10 லட்சம் பேருக்கு பாலியல் சார்ந்த நோய்கள் பரவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
View this post on Instagram

 

A post shared by Diesel (@diesel)இந்நிலையில், பாலியல் நோய் பரவல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதுகாப்பான பாலியல் உறவை வலியுறுத்தும் விதமாகவும் சுமார் 2 லட்சம் ஆணுறை குவியலுக்கு மத்தியில் மிலான் பேஷன் ஷோவில் ஒரு ஷோ நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆணுறை குவியலுக்கு மத்தியில் பேஷன் மாடல்கள் பேஷன் உடைகளை அணிந்து வந்து ரேம்ப் வாக் செய்தனர்.

இந்த ஷோவை ஏற்பாடு செய்து நடத்திய டீசல் நிறுவனம் 'பாதுகாப்பான உடலுறவு' என்ற தீம்மில் 2023 பனிக்கால பேஷன் ஷோவை நடத்துவதாக தெரிவித்துள்ளது. மேலும், பாலியல் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக டீசல் நிறுவனம் தனது தனது ஸ்டோர்களில் 3 லட்சம் ஆணுறைகளை இலவசமாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.

First published:

Tags: Condom, Fashion, Italy