முகப்பு /செய்தி /உலகம் / ஈரானில் தீவிரமடையும் ஹிஜாப் போராட்டம்.. காவல்துறை நடவடிக்கையில் 50க்கும் மேற்பட்டோர் பலி

ஈரானில் தீவிரமடையும் ஹிஜாப் போராட்டம்.. காவல்துறை நடவடிக்கையில் 50க்கும் மேற்பட்டோர் பலி

ஈரான் ஹிஜாப் போராட்டத்தில் 50 பேர் பலி

ஈரான் ஹிஜாப் போராட்டத்தில் 50 பேர் பலி

ஈரானில் நடைபெறும் போராட்டம் குறித்த தகவல்கள் வெளியுலகிற்கு செல்லாத வகையில் அரசு இணைய சேவைகளை முடக்கி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Inter, IndiaTehranTehran

ஈரான் நாட்டில் ஹிஜாப் சட்டத்திற்கு எதிரான பெண்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஐ எட்டியுள்ளது. 22 வயது இளம் பெண்ணான மாஷா அமினியின் மரணத்தை தொடர்ந்து அங்கு ஏற்பட்டுள்ள போராட்டம் சுமார் 80 நகரங்களில் பரவியிருக்கிறது.

போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஓடுக்கும் விதமாக காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், அங்கு நடைபெறும் போராட்டம் குறித்த தகவல்கள் வெளியுலகிற்கு செல்லாத வகையில், இணைய சேவைகளை முடக்கி வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை தளர்த்தி தொழில்நுட்ப நிறுவனமான எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் ஈரானுக்கு இணைய சேவைகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் காவல்துறையினரால் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டு படுகாயம் அடையும் காணொலிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகிவரும் நிலையில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் குரல்கள் ஒலித்து வருகின்றன.

அதேவேளை ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஐநா சபையில் பேசுகையில், போராட்டக்காரர்களுக்கும், வன்முறையாளர்களுக்கும் இடையே நாம் வேறுபாடை உணர வேண்டும் என தெரிவித்துள்ளார். எனவே அரசு, காவல்துறை நடவடிக்கை நியாயமானதே என அவர் கூறியுள்ளார்.

பெரும் போராட்டத்தின் பின்னணி

இஸ்லாமிய நாடான ஈரானில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. அதன்படி 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அங்கு பெண்கள் இஸ்லாமிய சட்டங்கள் ஹிஜாப் அணிவது உள்ளிட்டவற்றை கண்காணிக்க நெறிமுறை பிரிவு என்று காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் மேற்கு ஈரான் பகுதியான குர்திஸ்தான் பகுதியில் இருந்து தலைநகரில் தெஹ்ரானுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது அந்த பெண் முறையாக ஹிஜாப் அணியாமல் இருந்துள்ள நிலையில், நெறிமுறை காவல்துறையினர் அந்த பெண் வந்த வாகனத்தை தடுத்து சோதனை செய்துள்ளனர்.

இதையும் படிங்க: கனடாவில் வசிக்கும் இந்தியர்கள், மாணவர்கள் உஷாராக இருங்கள்... வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை!

அப்போது இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியாததாக கூறி, அவரை கைது செய்து அவரை தாக்கியதில் மாஷா அமினி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த மரணத்திற்கு எதிராக நீதிகேட்டும் அரசின் அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராகவும் ஈரானில் பெண்கள் ஹிஜாப்பை எரித்து, தலைமுடிகளை வெட்டி, வீதிகளில் களமிறங்கி இறங்கி பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Hijab, Iran, Protest