இரவு நேர விடுதியில் போலீஸ் ரெய்டால் அனைவரும் ஓட்டம் - நெருக்கடியில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு
இரவு நேர விடுதியில் போலீஸ் ரெய்டால் அனைவரும் ஓட்டம் - நெருக்கடியில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு
பெரு நாட்டில் அனுமதியின்றி செயல்பட்ட இரவு நேர கேளிக்கை விடுதிக்கு போலீசார் வருவதை கண்ட பலரும் ஓடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்.
பெரு நாட்டில் அனுமதியின்றி செயல்பட்ட இரவு நேர கேளிக்கை விடுதிக்கு போலீசார் வருவதை கண்ட பலரும் ஓடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்.
கொரோனா பரவல் காரணமாக பெருவில் கேளிக்கை விடுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், தலைநகர் லிமா அருகே இரவு நேர கேளிக்கை விடுதி செயல்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு வருவதை கண்ட விடுதியில் இருந்த 120க்கும் மேற்பட்டவர்கள் தப்பிச் செல்வதற்காக ஓடினர்.
அப்போது, வாசல் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 12 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே போலீசாரிடம் பிடிபட்ட 23 பேரில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.