• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • அமெரிக்காவில் மதுக்கூடத்தில் பயங்கரம் - துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் படுகொலை!

அமெரிக்காவில் மதுக்கூடத்தில் பயங்கரம் - துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் படுகொலை!

துப்பாக்கிச்சூடு நடந்த இடம் (Image:AP)

துப்பாக்கிச்சூடு நடந்த இடம் (Image:AP)

12 people killed in US bar shooting | மதுக்கூடத்தில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த மர்மநபர் தாக்குதல் நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அமெரிக்காவில் மதுக்கூடத்தின் உள்ளே துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 12 பேர் பலியான சம்பவம் நடந்துள்ளது. 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள தவுசண்ட் ஓக்ஸ் என்ற நகரத்தில் இருக்கும் மதுக்கூடத்தில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவில் புகுந்த நபர், தனது துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

மதுக்கூடத்தை முற்றுகையிட்ட போலீசார், கொலையாளியை பிடிக்க முயற்சி எடுத்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 12 பேர் மதுக்கூடத்தின் உள்ளேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கொலையாளியும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.



Also See..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: