சீனாவில் நிலநடுக்கம்: 11 பேர் உயிரிழப்பு-122 பேர் படுகாயம்

நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது.

சீனாவில் நிலநடுக்கம்: 11 பேர் உயிரிழப்பு-122 பேர் படுகாயம்
சீனாவில் நிலநடுக்கம்
  • News18
  • Last Updated: June 18, 2019, 10:46 AM IST
  • Share this:
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 122 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவான் பகுதியில் நேற்று அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 11 பேர் உயிரிழ்ந்துள்ளனர். 122 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது.

நேற்று இரவு 11 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்துள்ளது. இதில் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


நிலநடுகத்தில் காயம் அடைந்தவர்களை மீட்கும் மீட்பு குழுவினர்.


தீயணைப்பு வாகனங்களில் சுமார் 302 தீயணைப்பு வீரர்கள், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர்.


Also see...நிலச்சரிவில் சிக்கி 61 பேர் உயிரிழப்பு: பாலம் உடையும் பதறவைக்கும் காட்சி!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading