முகப்பு /செய்தி /உலகம் / விண்வெளியில் முதல் கான்க்ரீட்... எதிர்காலத்துக்காக விண்வெளி வீரர்கள் புது முயற்சி

விண்வெளியில் முதல் கான்க்ரீட்... எதிர்காலத்துக்காக விண்வெளி வீரர்கள் புது முயற்சி

விண்வெளி (மாதிரிப்படம்
)

விண்வெளி (மாதிரிப்படம் )

பூமியில் தயாராகும் சிமென்ட்டை விட விண்வெளியிலிருந்தே வீரர்கள் தயாரித்த சிமென்ட்தான் பயனளித்தது என்றுள்ளது நாசா.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

விண்வெளியில் கான்க்ரீட் அமைப்பதற்கான முயற்சி வெற்றி பெறும் சூழலில் வருங்காலத்தில் மனிதர்கள் நிலவில் அல்லது செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகும் என்கிறது புதிய ஆய்வு ஒன்று.

சர்வதேச விண்வெளி நிலையம் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள விண்வெளி வீரர்கள் விண்வெளியில் கான்க்ரீட் அமைக்க முடியுமா என்றதொரு ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அவர்களின் ஆராய்ச்சி முடிவில், விண்வெளியில் சிமெண்ட் இறுகுகிறது. இதனால் கான்க்ரீட் தளம் அமைக்க முடியும் என நிரூபணம் செய்துள்ளனர்.

மேலும், கான்க்ரீட் அமைக்க முடியும் என்றால் அண்ட கதிர்வீச்சில் இருந்து விண்வெளி வீரர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் ஆய்வாளர்கள் விளக்குகின்றனர். இதுகுறித்து நாசா மூலம் அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க பேராசிரியர் அலெக்சாண்ட்ரா ராட்லின்ஸ்கா, “நிலா மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் போது விண்வெளியில் அவர்களுக்குக் கடுமையான தட்பவெட்ப நிலையிலிருந்தும் கதீர்வீச்சுகளிலிருந்தும் பெரும் பாதிப்பு ஏற்படும்.

இதற்கு உதவ கான்க்ரீட் மட்டுமே நல்ல தீர்வாக இருக்கும். விண்வெளியில் கான்க்ரீட் அமைக்கும் போது அது நமக்கு நன்மையே. வரும் காலத்தில் இதனது பயன் மிகவும் பெரிதாக இருக்கும்” என்றார். இந்த ஆய்வை மைக்ரோ க்ராவிட்டியில் சிமெண்ட் இறுகும் தன்மை குறித்த ஆராய்ச்சி எனப் பெயரிட்டுள்ளனர்.

ஆனால், பூமியில் தயாராகும் சிமென்ட்டை விட விண்வெளியிலிருந்தே வீரர்கள் தயாரித்த சிமென்ட்தான் பயனளித்தது என்றுள்ளது நாசா. முதல் முயற்சியில் நேர்மறை முடிவு கிடைத்திருப்பதால் அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகள் தொடர்ந்து வருகின்றன.

மேலும் பார்க்க: பூமியைவிட பெரிய ஆஸ்டிராய்டு எதுவும் நம்மைத் தாக்க வாய்ப்பில்லை - ஆய்வாளர் விளக்கம்

மசூத் அசாரை பாக். ரகசியமாய் விடுவித்ததாக உளவுத்துறை எச்சரிக்கை!

First published:

Tags: Spacecraft