தனிமைப்பட்டு இருக்க முடியவில்லையா? விண்வெளி வீரர்கள் வழங்கும் சிறந்த ஆலோசனைகள் இவை..!

“அபாயத்தை புரிந்துகொள்ளுங்கள். ஆனால் பயப்படத் தேவையில்லை” என்று அறிவுறுத்தியிருக்கிறார் க்ரிஸ் ஹேட்ஃபீல்ட்

தனிமைப்பட்டு இருக்க முடியவில்லையா? விண்வெளி வீரர்கள் வழங்கும் சிறந்த ஆலோசனைகள் இவை..!
விண்வெளி வீரர்கள்
  • Share this:
உலக நாடுகள் தங்களைக் காத்துக்கொள்வதற்காக தங்கள் எல்லைகளை மூடிக்கொண்டன. ஆரம்பத்தில் நம்மை இந்த வைரஸ் என்ன செய்துவிடும் என்று அலட்சியம் காட்டிய நாடுகள் கூட மொத்த தன் ஓட்டைக் குறுக்கி மக்களைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்த மோசமான வைரஸிருந்து நம்மைக் காப்பதற்கான மருந்துகள் இன்னும் சோதனை நிலையில் இருக்கும் பட்சத்தில், நாம் செய்யத்தகுநத ஒன்று நம்மை நாம் காத்துக்கொள்வது மட்டுமே.

வார்த்தைக்கு வார்த்தை மருத்துவர்களாலும் அரசுகளாலும் அறிவுறுத்தப்படும் தனிமைப்பட்டிருத்தலை எப்படி சாதிக்கப்போகிறார்கள் மக்கள் என்பது இன்னும் குழப்பமான நிலையாகவே நீடிக்கிறது. வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா போன்ற நாடுகளில் உணவுக்காகவாவது மக்கள் வெளிவரவே செய்கிறார்கள். இந்நிலையில், தனிமைப்பட்டிருந்தலின் அவசியத்தையும், அதற்கான வழிமுறைகளையும் நமக்கு விளக்குகிறார்கள் விண்வெளி வீரர்கள்.

ஆனி மெக்க்ளெயின்:ஒரே வார்த்தைதான். பொறுப்பை ஏற்றுக்கொள்ளுக்கள். சூழலுக்கு ஏற்ற நிலையில் உங்களது ஸ்டைலை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள். குறிக்கோள்களை அமைத்து அதற்காக உழையுங்கள். உங்களை வழிநடத்துபவர்கள் யாரேனும் இருந்தால், அவர்களை நீங்கள் பின்பற்றலாம் ஆனால் சரியான நேரத்தில் கேள்விகளும் சந்தேகங்களும் அவசியம் என்கிறார்.

ஸ்காட் கெல்லி

340 நாட்களுக்கு விண்வெளி களத்துக்குள்ளேயே அதே குழுவிடம் பேசிக்கொண்டு வாழ்ந்த ஸ்காட், நியூ யார்க் டைம்ஸின் சிறந்த கட்டுரையாளர்களில் ஒருவர்.

தனிமைப்பட்டிருக்கும்போது உங்களால் திட்டமில்லாத வேலையைச் செய்ய முடியாது. உங்கள் வேலைகளில் திட்டமும் கட்டமைப்பும் இருக்கட்டும். அதில்லாமல் உங்களால் இந்த நாட்களை நகர்த்த முடியாது.

க்றிஸ் ஹேட்ஃபீல்ட்

ஸ்பேஸ் ஷட்டில் மிஷன்கள் பலவற்றுக்கு பைலட்டாக இருந்தவர். இம்மாதம் மார்ச் 21-ஆம் தேதி இவர் வெளியிட்டிருக்கும் யூ ட்யூப் வீடியோவில் தனிமைப்பட்டிருத்தலைப் பேசும் அவர், “அபாயத்தை புரிந்துகொள்ளுங்கள். ஆனால் பயப்படத் தேவையில்லை” என்று அறிவுறுத்தியிருக்கிறார்.பெக்கி விட்சன்:

இந்த க்வாரண்டைன் நாட்கள் முழுவதும் நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டியதும், செயல்படுத்த வேண்டியதும் ஒன்றுதான். அது சரியாக தொடர்புகொள்ளும் கலையை வளர்த்துக்கொள்வது. மற்றொருவரிடம் தொடர்பு கொள்ளும் திறனை வளர்க்க இது சிறந்த சந்தர்ப்பம் என்கிறார்.

பஸ் ஆல்ட்ரின்

ஆல்ட்ரின், நீல் ஆர்ம்ஸ்ட்ராங்குடன், மைக் கோலின்ஸுடன் அப்போலோ மிஷன்ஸில் நிலவுக்குச் சென்றவர்.

உடற்பயிற்சி செய்யுங்கள், உரையாடலை மேற்கொள்ளுங்கள் என்கிறார் ஆல்ட்ரின்.

பூமியிடமிருந்தே தள்ளி வாழ்ந்தவர்களின் அறிவுரை இது. உங்களுக்கும் எனக்கும் கூட இது இதவும்.

வீட்டிலிருங்கள், பாதுகாப்பாக இருங்கள். 
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading