Home /News /international /

வாவ்...இவ்ளோ அழகா நம்ம பூமி! ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்து பூமியை புகைப்படம் எடுத்த விண்வெளி வீரர்!

வாவ்...இவ்ளோ அழகா நம்ம பூமி! ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்து பூமியை புகைப்படம் எடுத்த விண்வெளி வீரர்!

இவ்ளோ அழகா நம்ம பூமி

இவ்ளோ அழகா நம்ம பூமி

Space : நாம் வாழும் இந்த பூமியை விண்ணில் இருந்து பார்க்க கூடிய அந்த அனுபவம் கோடிகளில் ஒருவருக்கு தான் கிடைக்க கூடும்.

விண்வெளி பற்றிய எல்லா விதமான செய்திகளும் நம்மை வியக்க வைக்க கூடிய வகையில் உள்ளன. இவற்றில் சாதாரண விண்கற்கள் பற்றிய செய்திகள் முதல் செவ்வாய் கிரகம் பற்றிய செய்திகள் வரை அடங்கும். விண்வெளிக்கு செல்ல கூடிய வீரர்கள் அங்கு இருக்கும் சூழலை அவ்வப்போது படமாக எடுப்பது வழக்கம். இது அவர்களுக்கு புத்துணர்வை தரக் கூடிய அனுபவமாக இருக்கும்.

இது போன்று நிலாவிற்கு செல்லும் போது பல வித புகைப்படங்களை விண்வெளி வீரர்கள் படமெடுத்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவார்கள். இதை பார்க்கும் நமக்கும் கண்கொள்ளா காட்சியாக இது அமையும். பல விண்வெளி வீரர்களுக்கும் வாழ்நாளில் ஒரு முறையாவது பூமியின் அழகிய புகைப்படத்தை விண்ணில் இருந்து எடுத்து விட வேண்டும் என்கிற ஆசை இருக்கும்.

இது போன்று சில விண்வெளி வீரர்கள் பூமியை படமாக எடுத்து பதிவிடுவார்கள். நாம் வாழும் இந்த பூமியை விண்ணில் இருந்து பார்க்க கூடிய அந்த அனுபவம் கோடிகளில் ஒருவருக்கு தான் கிடைக்க கூடும். இது போன்று கிடைத்த வாய்ப்பை வைத்து பூமியை சிறப்பான முறையில் புகைப்படம் எடுத்துள்ளார் ஒரு விண்வெளி வீரர்.

 



 




View this post on Instagram





 

A post shared by Matthias Maurer (@esamatthiasmaurer)






 

அதுவும் சாதாரணமாக இல்லை. உலகில் பலர் வியந்து பேச கூடிய ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்து நமது பூமியை படம் எடுத்துள்ளார். மத்தியாஸ் மாரர் என்பது தான் இந்த விண்வெளி வீரரின் பெயராகும். இவர் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஸ்பேஸ் ஸ்டேஷன்) பணிபுரிந்து வருகிறார். இவர் விண்வெளி சார்ந்த பல்வேறு பதிவுகளை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார். இவரது பதிவுகள் மக்கள் மத்தியில் வைரலாக கூடியவையாக இருக்கும். அதே போன்று பேசுபொருளாகவும் உருவாகி விடும். உதாரணமாக, தற்போது பூமியின் அற்புதமான அழகைக் காட்டும் இவரின் சமீபத்திய பதவு பலரை வியக்க வைத்துள்ளது.

இதையும் படியுங்கள் :  அரச குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் தாய்மைக்கு உரிய கடமை தவறாத கேட் மிடில்டன்!

இது குறித்து இவர் சில வரிகளையும் பகிர்ந்துள்ளார். “மேலிருந்து பார்த்தால், நமது பூமி ஒரு உண்மையான கலைப் படைப்பாகத் தெரிகிறது. அரேபிய தீபகற்பத்தின் இந்த வண்ணமயமான படங்களை நான் எடுத்தேன், ஆனால் பாலைவனத்தில் உள்ள இந்த வடிவங்களும் கோடுகளும் என்னவென்று நான் அறிந்துகொள்ள ஆச்சரியப்படுகிறேன்" என்று விண்வெளி வீரர் மத்தியாஸ் சிந்தனை முகம் உள்ள எமோஜியை சேர்த்து இதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் நமது பூமியை பல்வேறு அழகிய வண்ணங்களில் காண்பிக்கும் சில படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவுகளை பலர் லைக் செய்து வருகின்றனர். மேலும் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் சிலர் "அற்புதமான புகைப்படம். இதை பகிர்ந்ததற்கு நன்றி" என்று போஸ்ட் செய்துள்ளனர். மேலும் சிலர் ' இது பார்ப்பதற்கு ஓவியம் போல உள்ளதே' என்று ஆச்சரியம் பொங்க கேட்டு வருகின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Space

அடுத்த செய்தி