பிரேசிலில் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஒருவர் மரணம்...!

பரிசோதனையின் ஒரு பகுதியாக போலி மருந்து மட்டுமே அவருக்கு வழங்கப் பட்டதாகவும் அஸ்ட்ராஸெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரேசிலில் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஒருவர் மரணம்...!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: October 22, 2020, 4:05 PM IST
  • Share this:
பிரேசிலில் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற ஒருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அஸ்ட்ராஸெனகா நிறுவனம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி பரிசோதனையை உலகம் முழுதும் பல்வேறு இடங்களில் மேற்கொண்டு வருகிறது.

பிரேசிலில் மேற்கொள்ளப்பட்ட இந்த பரிசோதனையில் பங்கேற்ற இளம் மருத்துவர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் பரிசோதனையில் பங்கேற்ற நபருக்கு உண்மையான தடுப்பூசி வழங்கப் படவில்லை என்றும், பரிசோதனையின் ஒரு பகுதியாக போலி மருந்து மட்டுமே அவருக்கு வழங்கப் பட்டதாகவும் அஸ்ட்ராஸெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது.


Also read... கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் சிகிச்சை மற்றும் மருந்துகள் என்னென்ன?

இதனால் பிரேசிலில் பரிசோதனை தடையின்றி நடைபெறும் என அந்நிறுவனம் அறிவித்துள்ள போதும், அந்நிறுவனத்தின் பங்குகள் 1.7 சதவீதம் குறைந்தது.
First published: October 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading