20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.இதையடுத்து அங்கிருக்கும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்ற பல்வேறு நாட்டு விமானங்களும், காபூல் விமானநிலையத்தில் வந்திறங்கின. மக்களை ஏற்றிச்செல்ல ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவர்களுக்கு கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் காபூல் விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவின் கடைசி ராணுவ விமானம் கிளம்பியதாக, அந்நாட்டின் மத்திய கட்டளை தளபதி கென்னத் மெக்கென்சி தெரிவித்தார்.
20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தங்கள் ராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, தற்போது முடிவுக்கு வந்துள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார். அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு நன்றி கூறிய பைடன், கடந்த 17 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்க குடிமக்களை ஆப்கானிலிருந்து வெளியேற்றி இருப்பதாக தெரிவித்தார்.
Also Read : ஆப்கானுக்கு திரும்பிய ஒசாமா பின்லேடனின் முக்கிய கமாண்டர்
மேலும் தலிபான்கள் பாதுகாப்பான பாதையில் உறுதிமொழிகளைச் செய்துள்ளனர். உலகநாடுகள் அவர்களை தங்கள் கடமைகளுக்குக் கட்டுப்படுத்தும். ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்புவோருக்காக விமான நிலையத்தை மீண்டும் திறக்க தலிபான்களுடன் ஒருங்கிணைப்புடன் செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.